பிடிஆர் டூ ஆ.ராசா.. "மேலே இருந்து வந்த மெசேஜ்?" அடித்து ஆடிய சூரியன்! புது தெம்பு! அப்போ கன்பார்ம்?
சென்னை: ஆளும் திமுகவில் உள்ள அமைச்சர்கள், எம்பிக்கள் அடித்து ஆட தொடங்கி உள்ளனர். 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக தீவிரமாக திட்டங்களை வகுத்து வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேற்று முதல்நாள் விருதுநகரில் திமும் முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் லோக்சபா தேர்தல் குறித்து வெளிப்படையாக பேசினார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் விருதுநகர் மாவட்டம் பட்டம் புதூரில் நேற்று திமுக முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெற்றிபெற வேண்டும். 40 இடங்களில் 40ஐயும் வெல்ல வேண்டும்.

சுயாட்சி
அதுவே நாம் மாநில சுயாட்சியை காப்பதற்கான வழியாக இருக்கும். இதற்கு களப்பணி ஆற்ற வேண்டும். பெரியார், அண்ணா பெயரில் நாம் மீண்டும் நாடாளுமன்றத்தில் பதவி ஏற்க வேண்டும். அதற்கு இப்போது நீங்கள் களப்பணி ஆற்ற தயாராக இருக்க வேண்டும். மாநிலங்கள் வலிமையாக இருப்பதை இந்த வெற்றியின் மூலம் நாம் உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

சமிக்கை
முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சு லோக்சபா தேர்தலுக்கு திமும் தயாராகிவிட்டது என்பதை காட்டுவதாக உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு பாஜகவோடு திமுக கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என்பதை காட்டும் விதமாக இந்த பேச்சு அமைந்து உள்ளது என்றும் அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில்தான் திராவிட கொள்கைகளை ஆளும் தரப்பு அமைச்சர்கள், எம்பிக்கள் தீவிரமாக பேச தொடங்கி உள்ளனர்.

என்ன சொன்னார்
சமீபத்தில் திமு எம்பி ஆ. ராசா பேசுகையில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான்.உச்ச நீதிமன்றம் சொல்கிறது இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது;. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன்.. இந்துவாக இருக்கும் வரை நாம் பஞ்சமன்.. இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவர்கள்.. இந்துவாக இருக்கும் வரை நாம் விபச்சாரியின் மகன். இந்த அவலத்தை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ஆ. ராசா காட்டமாக பேசி இருந்தார்.

சர்ச்சை
ஆ ராசா இப்படி பேசியதும் அதை முதல்ல ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்று பாஜகவினர் அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர். முதல் ஸ்டாலின் தரப்பில் இருந்து எதற்கு எதிராக எந்த வித ரியாக்ஷனும் கொடுக்கப்படவில்லை. அமைச்சர்கள் சேகர்பாபு உள்ளிட்டாலும் ஆ ராசாவின் கருத்துக்கு பதில் அளிக்க மறுத்து விட்டனர். மாறாக திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் இதே போன்ற கருத்தை தனது twitter பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், அனைவருக்கும் ஜாதி மத பிரச்சனைகள் ஏற்றத்தாழ்வுகளுக்கு மனு தர்மம் தான் காரணம்.

தப்பில்லை
ஆ ராசா பேசியதில் தவறு இல்லை. அவர் பேசியது முழுக்க முழுக்க உண்மை. சாணதான கருத்துக்களை பேசுபவர்களுக்கு எதிராகவும், அதை வைத்து கீழ்த்தரமான அரசியல் செய்ய முயல் பவர்களுக்கு எதிராகவும் ஆராசாவின் பேச்சு அமைந்திருந்தது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டி பேசியிருந்தார். திமுக ஆராசாவின் பேச்சை கண்டுக்க வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை வைத்து இருந்த நிலையில் திமுக அமைச்சரின் ராசாவின் பேச்சுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது பாஜகவை மேலும் கொந்தளிக்க வைத்தது. கடந்த சில மாதங்களாக பெரிதாக அமைச்சர்கள் அதிரடி கருத்துக்களை கூறாத நிலையில் இப்போது மீண்டும் அடித்த ஆட தொடங்கியுள்ளனர்.

பிடிஆர்
ஏற்கனவே அமைச்சர் பி டி ஆர் மத்திய பாஜக அரசு எதிராக கடுமையான கருத்துக்களை வைத்து வருகிறார். இலவசங்களுக்கு எதிரான வழக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகிறார். இந்த நிலையில் பிடிஎஃப் போலவே தற்பொழுது ஆ ராசா மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரும் பேசத் தொடங்கியுள்ளனர். புது தெம்புடன் இவர்கள் இப்படி பேசுவது வருங்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதற்கான சமைக்கையாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக திமுக மேலிடம் இவர்களுக்கு அதிரடியாக பேச கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதா என்றும் என்ன தோன்றுகிறது.

ஸ்டாலின்
வரும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலினும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். மத்திய அரசி கல்விக்கொள்கை, தேசிய அளவில் மத்திய அரசு மாநில அரசுகளை கட்டுப்படுத்த நினைப்பது, இந்தி திணிப்பு, மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது என்று பல விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார். அதோடு ஆளுநர்களுக்கு எதிராகவும் முதல்வர் ஸ்டாலின் வலிமையான கருத்துக்களை வைத்தார். அமைச்சர்கள் இந்த திடீர் பேச்சும் முதல்வர் ஸ்டாலினின் பேச்சும் பாஜகவுடன் திமுக வரும் நாட்களில் கூட்டணி வைக்காது என்பதற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன.
-
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்?












Click it and Unblock the Notifications