சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எஸ்தர் முதல் அரவிந்த் சுப்ரமணியன் வரை.. சர்வதேச டீமை தட்டி தூக்கிய தமிழ்நாடு அரசு.. எப்படி நடந்தது?

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பொருளாதார துறையில் சிறந்து விளங்கும் வல்லுநர்களை கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து உள்ளது. முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் தலைமையில் மாபெரும் ஆலோசனை நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    சர்வதேச Team-ஐ தட்டி தூக்கிய Tamilnadu அரசு.. எப்படி நடந்தது?

    நாங்கள் ஆட்சிக்கு வந்ததும்.. தமிழ்நாட்டை கடனில் இருந்தும் மீட்போம். தமிழ்நாட்டை கடனில் இருந்து மீட்பதோடு புதிய வருமான வழிகளை கொண்டு வருவோம். அதோடு மக்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் திட்டங்கள் அனைத்தையும் கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.

    நான் வாய் ஜாலம் பேசவில்லை. பொருளாதார வல்லுநர்களை ஆலோசித்து, வருமானத்தை பெருக்கி, திட்டங்களை நிறைவேற்றுவேன்.. இது முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டி.. முதல்வர் ஸ்டாலின் சொன்னது போலவே தற்போது மிகப்பெரிய வல்லுநர் கமிட்டியை தமிழ்நாடு அரசு உருவாக்குகிறது.

    சிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின்! அசரடிக்கும் சிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின்! அசரடிக்கும்

    கமிட்டி

    கமிட்டி

    தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும், அரசுக்கும் ஆலோசனை வழங்குவதற்காக முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் தலைமையில் மாபெரும் ஆலோசனை நிபுணர் குழு அமைக்கப்படுகிறது. அமெரிக்காவின் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டாப்லோ என்ற பொருளாதார நிபுணரும், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் ஜீன் டிரேசல், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயண் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    என்ன செய்வார்கள்

    என்ன செய்வார்கள்

    தமிழ்நாடு அரசுக்கு இவர்கள்தான் பொருளாதார ரீதியான ஆலோசனைகளை வழங்குவார்கள். திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது, பொருளாதாரத்தை எப்படி பெருக்குவது, வருமானத்தை எப்படி அதிகரிப்பது, புதிய வருமான வழிகளை எப்படி உருவாக்குவது, மக்களை வறுமையில் இருந்து மீட்பது எப்படி, கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவை களைவது எப்படி என்று இந்த வல்லுநர் குழுதான் ஆலோசனை வழங்க உள்ளது.

    ஆர்பிஐ

    ஆர்பிஐ

    முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் தலைமையில் இந்த குழு இயங்க உள்ளது. இவர் ஆர்பிஐ கவர்னராக இரண்டாவது டேர்ம் நீட்டிக்கப்படாத நிலையில் சிகாகோ பல்கலையில் மீண்டும் பேராசிரியராக இணைந்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருகிறார். ஆனால் ஒன்றிய அரசுக்கும் இவருக்கும் இடையில் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, இவரின் ஆலோசனைகள் பெரிதாக ஏற்கப்படுவது இல்லை.

    நியாய்

    நியாய்

    மக்களின் கைகளுக்கு நேரடியாக பணத்தை கொண்டு செல்லும், கட்டாய மாத நிதி வருமான திட்டங்களாக நியாய் (nyay) போன்ற காங்கிரசின் வாக்குறுதிகளை பாராட்டியவர் ரகுராம் ராஜன். இந்திய பொருளாதாரம் குறித்து கரைத்து குடித்த தமிழரான ரகுராம் ராஜனை தமிழ்நாடு அரசு அழைத்து வந்து இருப்பது வியக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

    யார்

    யார்

    ரகுராம் ராஜன் போக ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் இதே குழுவில் இடம்பெறுகிறார். இவர் சமீபத்தில் அசோகா பல்கலையில் போதிய கல்வி சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் இல்லை என்று கூறி அதிரடியாக வெளியேறினார். ஒன்றிய அரசின் பல்வேறு வரவேற்பை பெற்ற பொருளாதார அறிவிப்புகளுக்கு பின் அரவிந்த் சுப்ரமணியன்தான் இடம்பெற்று இருந்தார்.

    வேறுபாடு

    வேறுபாடு

    ஒன்றிய அரசோடு அரவிந்த் சுப்ரமணியன், ரகுராம் ராஜன் ஆகியோருக்கு கருத்து வேறுபாடுகளும், அவர்களின் பொருளாதார கொள்கைகள் மீது இவர்களுக்கு விமர்சனங்களும் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில், இவர்கள் அடங்க குழுவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயணும் இதில் இடம்பெற்றுள்ளார்.

    எப்படி சாத்தியமானது

    எப்படி சாத்தியமானது

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ரகுராம் ராஜன் சர்வதேச அளவில் பொருளாதார பணிகளிலும், சிகாவோ பல்கலையில் பேராசிரியர் பணியிலும் பிசியாக இருக்கிறார். அரவிந்த் சுப்ரமணியன் பிரபல பிரவுன் பல்கலையில் பேராசிரியராக இணைய உள்ளார். நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டாப்லோ அமெரிக்காவில் சில பொருளாதார ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.. இப்படி பிஸியாக இருக்கும் வல்லுநர்களை தமிழ்நாடு அரசு ஒன்றாக இணைந்தது எப்படி என்பதே வியப்பை அளிக்கிறது.

    குழு

    குழு

    பொருளாதார துறையில் நிபுணத்துவம் கொண்ட இவர்களை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டிற்காக களமிறங்கியது எப்படி என்பதே வியப்பை அளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது. என்ன சொல்லி இவர்களை சம்மதிக்க வைத்து இருப்பார்கள், எப்படி இவர்களை தமிழ்நாட்டிற்காக களமிறக்க செய்தனர் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. இவர்களின் வழிகாட்டுதல் காரணமாக தமிழ்நாடு வேகமாக பொருளாதார சரிவில் இருந்து மீளும்.

    கடன்

    கடன்

    மற்ற மாநிலங்கள் செய்ய தவறிய விஷயத்தை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. தமிழ்நாட்டின் கடன் அடைக்கப்பட்டு, மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவில் இருந்து மீளும். மற்ற மாநிலங்களை விட வேகமாக தமிழ்நாடு மீண்டு வர இவர்களின் ஆலோசனைகள் வழிவகுக்கும். அடுத்த சில வருடங்களில் தமிழ்நாடு கண்டிப்பாக இந்த குழுவால் புதிய பொலிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    From Raghuram Rajan to Esther Duflo: How Tamilnadu Government formed an Expert Financial Committee to advise the state government?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X