கலக்கும் அதிமுக கூட்டணி.. எத்தனை எத்தனை டாக்டர்ஸ்.. இது மருத்துவ நல கூட்டணி பாஸ்!
தமிழகத்தில் தற்போது இருக்கும் கூட்டணிகளிலேயே அதிமுக கூட்டணிதான் அதிகம் படித்த டாக்டர்களை கொண்ட கூட்டணி என்று கூறுகிறார்கள்.
சென்னை: அட.. அதிமுக கூட்டணிக்கு இவ்வளவு பெரிய பலமா என்று நினைக்கும் அளவிற்கு அந்த கூட்டணியில் பல முக்கிய தலைவர்கள் இடம்பிடித்து இருக்கிறார்கள்.
தமிழகத்தில் தற்போது இருக்கும் கூட்டணிகளிலேயே அதிமுக கூட்டணிதான் அதிகம் படித்த டாக்டர்களை கொண்ட கூட்டணி என்று கூறுகிறார்கள். லோக்சபா தேர்தலுக்கான அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.
இன்னும் தேமுதிக இந்த கூட்டணியில் சேருவது மட்டும்தான் பாக்கி. அதுவும் இன்னும் இரண்டு நாட்களில் நடந்தேறிவிடும் என்று கூறுகிறார்கள்.

யார் இருக்கிறார்கள்
இந்த கூட்டணியில் அதிமுக, பாமக, பாஜக, ஐஜேகே, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம்பிடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் பாமகவிற்கு மொத்தம் 7 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பாஜகவிற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக இணையும்பட்சத்தில் அதற்கு 5 இடங்கள் வரை ஒதுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

மருத்துவர்கள்
இந்த அதிமுக கூட்டணியில் நிறைய மருத்துவர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி, டாக்டர் கிருஷ்ணசாமி, டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் இந்த கூட்டணியில் இருக்கும் முக்கியமான டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் என்ன
ஆனாலும் இவர்கள் எல்லோரும் எதோ ஒரு வகையில் கொஞ்சம் எதிரும் புதிருமானவர்கள். உதாரணமாக டாக்டர் தமிழிசை நீட் தேர்வை ஆதரிப்பவர். டாக்டர் ராமதாஸ் நீட் தேர்வை எதிர்ப்பவர். அதேபோல் டாக்டர் விஜயபாஸ்கர் குட்கா ஊழல் புகாரில் சிக்கி இருப்பவர், டாக்டர் அன்புமணி அதே ஊழல் புகாருக்கு எதிராக குரல் கொடுத்தவர் என்று கூட்டணி மொத்தமே மிகவும் வித்தியாசமான கூட்டணி ஆகும்.

வெறும் மக்கள் நல கூட்டணியா
இந்த கூட்டணி உருவான போது பாமக நிறுவனர் ராமதாஸ் இதுதான் சரியான மக்கள் நலக்கூட்டணி என்று குறிப்பிட்டார். ஆனால் இதில் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கையை பார்த்தால் இதை மருத்துவ நல கூட்டணி என்று கூட சொல்லலாம். எந்த கூட்டணியாக இருந்தாலும் இத்தனை மருத்துவர்கள் நீட் தேர்விற்கு எதிராக ஒன்றாக குரல் கொடுப்பார்களா என்ற பெரிய கேள்வியாக இருக்கிறது.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications