பெட்ரோல், டீசல் விலை... 45 நாட்களாக மாற்றமில்லை - வாகன ஓட்டிகள் நிம்மதி
பெட்ரோல், டீசல் விலை 45வது நாளாக இன்றும் மாற்றமின்றி விற்பனையாகிறது. சமையல் கேஸ் விலை உயர்ந்துள்ளது. விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை: சென்னையில் இன்றைய தினம் ஒருலிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 45 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

கடந்த ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளும் வரியை குறைத்ததால் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக குறைந்தது.
ஐந்து மாநில தேர்தல் காரணமாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்ந்தது. கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்வின்றி விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 45வது நாளாக சென்னையில் இன்றும் மாற்றமின்றி விற்பனையாகிறது. அதன்படி, ஒருலிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை உயராதது மன நிம்மதியை அளித்தாலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையும், வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலையையும், கேஸ் சிலிண்டர் விலையையும் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications