காம்ரெட்கள் கொந்தளிப்பு..நீளும் போராட்டங்கள்..இன்றும் பெட்ரோல் டீசல்9வது நாளாக அதே விலையில் விற்பனை
பெட்ரோல் டீசல் இன்றும் 9வது நாளாக அதே விலையில் விற்பனையாகிறது
சென்னை: 9வது நாளாக இன்றும், பெட்ரோல் ரூ.102.63 க்கும் டீசல் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகி வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
இந்நிலையில், மே -21-ம் தேதி அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.

நிர்மலா சீதாராமன்
அதனை தொடர்ந்து சென்னையில் மறுநாளே அதாவது 22-ம் தேதியே, பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதாவது, சென்னையில் கடந்த 45 நாட்களாக ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை நீடித்து வந்தது. குறிப்பாக, சென்னையில் மே 21 வரையில் நீண்ட நாட்களாக பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 100.94 ரூபாய் விலையில் எந்த மாற்றமின்றி அதே விலையில் நீடித்து வந்தது.

இன்றும் அதே விலை
இந்த விலை கடந்த 22-ந் தேதிதான் குறைந்தது... அதுவரை விலையில் மாற்றம் செய்யப்படாமலேயே இருந்த நிலையில், இந்த திடீர் விலை குறைப்பால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சற்று நிம்மதி அடைந்தனர்.... அப்போதிருந்து இன்றுவரை அதே விலையில் பெட்ரோல் விற்பனையாகிறது.. 7வது நாளாக இன்றும் அதாவது 28 -ம் தேதி, பெட்ரோல் ரூ.102.63 க்கும் டீசல் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகி வருகின்றன.

கள்ளக்குறிச்சி
இருந்தாலும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக்கோரி ஆர்ப்பாட்டங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன.. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை குறைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்தி கொண்டுதான் இருக்கிறது.. இந்த ஆர்ப்பாட்டங்களில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயா்வை குறைக்கக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டும் வருகின்றன.

கொள்முதல் நிறுத்தம்
இதனிடையே, நாளைய தினம், அதாவது 31-ந்தேதி பெட்ரோல்-டீசல் கொள்முதல் நிறுத்தும் போராட்டத்தை விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.. காரணம், கடந்த நவம்பர் 4 மற்றும் மே 21 ஆகிய தேதிகளில் சில்லறை விலை குறைப்பினால் ஏற்பட்ட இழப்பை முதன்மை உரிமையாளர் என்ற அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு ஈடு செய்திட வேண்டும். இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் நாளை ஒரு நாள் மட்டும் பெட்ரோல்-டீசல் கொள்முதல் செய்வதை அகில இந்திய அளவில் நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
பெட்ரோல் விலை ரூ.5.30 வரை உயர்வு.. டீசல் ரூ.3 வரை அதிகரிப்பு.. இடியை இறக்கிய நயாரா நிறுவனம் -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
ஈரான் சொன்ன பாசிட்டிவ் நியூஸ்.. ஆனா பாருங்க இந்தியாவில் பதற்றம் குறையல! நேற்று குஜராத், இன்று அசாம்! -
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications