விண்ணை தாண்டி செல்லும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. வாகன ஓட்டிகள் அவதி
சென்னை: இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் மாற்றம் செய்து வருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை, மற்றும் டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 19 பைசாக்கள் உயர்ந்து ரூ.85.92க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 31 பைசாக்கள் உயர்ந்து ரூ.79.51க்கு விற்கப்படுகிறது.
[பத்த வச்சு.. கொத்தி எடுத்து.. பிடித்து இழுத்து.. வெட்டி எறிந்து.. அட ஹேர் கட்டிங்தான் இது!]
பெட்ரோல் டீசல் விலையால் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதால் பெரும் அவதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications