பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை - விலை குறையுமா? என எதிர்பார்ப்பு
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: கடந்த ஒரு வாரகாலமாக பெட்ரோல், டீசல் உயர்ந்து வந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் 106 ரூபாய் 66 பைசாவிற்கும் டீசல் லிட்டர் 102 ரூபாய் 59 பைசாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின.
கொரோனா 2ஆம் அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. நூறு ரூபாய்க்கு மேல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
அதன் பின்னரும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கேஸ் சிலிண்டர்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 266 ரூபாய் அதிகரித்துள்ளது. 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இதற்கு முன்னதாக 1,734 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ. 266 அதிகரித்து 2000.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலைவாசி மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏழாவது நாளாக நேற்று உயர்த்தப்பட்டது. சென்னையில் நேற்று 1 லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து 106 ரூபாய் 66 பைசாவாகவும் டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. 1 லிட்டர் டீசல் 102 ரூபாய் 59 பைசாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.
மும்பையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 115 ரூபாய் 85 பைசாவாக விற்பனையாகிறது.1 லிட்டர் டீசல் விலை 106 ரூபாய் 62 பைசாவாகவும் விற்பனையாகிறது. அதே போல கொல்கத்தாவில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 110 ருபாய் 49 பைசாவாகவும், 1 லிட்டர் டீசல் விலை 101 ரூபாய் 56 பைசாவாகவும், டெல்லியில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 110 ரூபாய் 04 பைசாவாகவும், 1 லிட்டர் டீசல் விலை 98 ரூபாய் 42 பைசாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினத்தில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் 106 ரூபாய் 66 பைசாவிற்கும் டீசல் லிட்டர் 102 ரூபாய் 59 பைசாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவது இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications