நாளை முதல் சென்னை எழும்பூரில் ரத்து செய்யப்படும், தாம்பரத்தில் புறப்படும் ரயில்கள் முழு விவரம்
சென்னை: பரங்கிமலை வேளச்சேரி பறக்கும் ரயில் மேம்பால பணிகள் காரணமாக, எழும்பூரில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் செல்லக்கூடிய அனைத்து மின்சார ரயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 10 மணிக்கு மேல் புறப்படும் மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னை பரங்கிமலை வழிதடத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான இரவு நேர புறநகர் ரயில்கள் நாளை முதல் 3 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.20, 10.40, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு புறப்பட்டு செல்ல கூடிய புறநகர் மின்சார ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.40, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட கூடிய செங்கல்பட்டு புறநகர் ரயிலும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே போல மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.40, 11.20, 11.40 ஆகிய நேரங்களிலும், செங்கல்பட்டிலிருந்து 10.10 மணிக்கு புறபட்டு சென்னை கடற்கரைக்கு வரக்கூடிய புறநகர் ரயில்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் புறப்படும் 3 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையும், எழும்பூரில் இருந்து தாம்பரம் வரையில் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து இரவு 10.55-க்கு புறப்படக்கூடிய மன்னார்குடிக்கு செல்ல கூடிய மன்னை எக்ஸ்பிரஸ் (16179) ரயிலானது பகுதியாக எழும்பூரில் இருந்து தாம்பரம் வரையில் நாளை முதல் 3-ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து 11.15 மணிக்கு புறப்படக்கூடிய மங்களூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூரில் இருந்து தாம்பரம் வரையில் நாளை முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது அதே போல் சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு செல்லக்கூடிய ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் நாளை(நவ 1) முதல் 3-ம் தேதி வரையில் எழும்பூரில் இருந்து தாம்பரம் வரையில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பரங்கிமலை வேளச்சேரி வழித்தடத்தில் ரயில்வே மேம்பாலத்தில் ராட்சத இரும்பு பாலம் அமைக்கப்படுவதால் தற்காலிமாக ரயில்கள் இரவு நேரங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரும்பு பால பணிகள் முடிந்தால் வேளச்சேரி பரங்கிமலை இடையே விரைவில் ரயில் சேவை துவங்கப்பட வாய்ப்பு உள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications