சென்னை மழை.. 4, 5 நாட்கள் மழை நீர் தேங்கும் இடங்களில் கூட நீர் தேங்கவில்லை! ககன்தீப்சிங் பேடி பளீச்
சென்னை: சென்னையில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்த நிலையில், மழை நீர் தேங்குவது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இப்போது தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.. சென்னையில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது.
எப்போதும் சென்னையில் சிறு மழை என்றாலே முக்கிய சாலைகளில் நீர் தேங்கிவிடும். ஆனால் வடிகால் பணிகள் காரணமாக இம்முறை மழை நீர் அந்தளவு தேங்கவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ககன்தீப் சிங் பேடி
இது தொடர்பாகச் செய்தி நிறுவனம் ஒன்றுக்குச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், "சுமார் 2 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். மழை நீர் அகற்றும் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக நீண்ட கால பிரச்சினைகள் ஓரளவுக்குச் சரியாகி உள்ளது.

அதிகாரிகள்
தியாகராய நகர், ஜி.என் செட்டி சாலை, மாம்பலம், கொளத்தூர் பகுதிகளில் கனமழை பெய்த போதிலும், பெரியளவில் மழை நீர் தேங்கவில்லை. மழைக் காலத்தில் சில சமயங்களில் இலை, தழைகள், குப்பைகளால் வடிகாலில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மழை நீர் தேங்க இதுவும் ஒரு காரணம். இதைக் கண்காணித்துச் சரி செய்ய 15 ஐஏஎஸ் அதிகாரிகள், பொறியாளர்களைக் களத்தில் இறக்கியுள்ளோம்.

ஊழியர்கள்
இரவு முதலே நாங்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு உள்ளோம். முக்கிய சாலைகளில் எங்கும் பெரியளவில் மழை நீர் தேங்கவில்லை. ஆங்காங்கே சில இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கி உள்ளது. அதைச் சரி செய்யும் பணிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். தேவையென்றால் கூடுதல் மோட்டர்கள் மூலம் நீரை வெளியேற்றவும் தயாராக உள்ளோம். மேலும், காலை முதல் 20,000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களும் மழை நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

4,5 நாட்கள் தேங்கும் இடங்கள்
மழை நீர் எங்கும் பெரியளவில் தேங்கவில்லை. உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஆண்டு எல்லாம் மழை வந்தாலே சீதாம்மாள் காலணி பகுதிகளில் 10 நாட்கள் வரை மழை நீர் தேங்கும். ஆனால், நேற்று அதிக மழை பெய்தும் கூட அங்கு மழை தேங்கவில்லை.. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஜிஎன் செட்டி சாலை, ராகவாச்சாரி சாலைகளில் பொதுவாகவே மழை பெய்தால் 4, 5 நாட்கள் வரை நீர் தேங்கும். ஆனால், நேற்று 150 மிமீ மேல் மழை பெய்தும் கூட மழை நீர் தேங்கவில்லை.

தேங்கவில்லை
கேகே நகர், ராஜமன்னார் சாலை பகுதிகளிலும் மழை நீர் தேங்கவில்லை. இரவு அதிதீவிர கனமழை பெய்த போதும் கூட நகரின் பல பகுதிகளில் பெரியளவில் மழை நீர் தேங்கவில்லை. நீர் விரைவாக வடிந்துவிட்டது. புளியந்தோப்பு பகுதியிலும் முக்கிய சாலைகளில் மழை நீர் இல்லை. சில கிளை தெருக்களில் மட்டுமே மழை நீர் தேங்கியுள்ளது. அதுவும் மெல்ல வடிந்து வருகிறது.

நடவடிக்கை
நகரில் தாழ்வான பகுதிகளில் தான் மழை நீர் தேங்குகிறது. அங்கும் கூட நீரை உடனடியாக வெளியேற்ற நிரந்தரமாக மழை நீரை அகற்ற பம்ப் வசதி ஏற்படுத்தி உள்ளோம். அது மிகச் சிறப்பாகவே செயல்படுகிறது. மாநகராட்சி மூலம் வடிகால் பணிகள் செய்யப்பட்ட இடங்களில் மழை நீர் தேங்கவில்லை. இத்தனை மாதங்களாக நாங்கள் செய்த மழை நீர் வடிகால் பணிகளுக்குப் பலன் கிடைத்து இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்" என்றார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications