சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திசை மாறி யூ டர்ன் போட்டு குழப்பிய கஜா புயல்.. சென்னைக்கு பாதிப்பா?

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று நாள் முழுவதும் மழை பெய்யுமா? | தமிழ்நாடு வெதர்மேன் மற்றும் வானிலை ஆய்வு மையம்- வீடியோ

    சென்னை: கஜா புயல் நகரும் பாதையில் திடீரென இன்று மதியம் மாற்றம் ஏற்பட்டது. தென் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்த புயல் நேராக மேற்கு திசை நோக்கி நகர்ந்தது. ஆனால், பிறகு, அது வழக்கம்போல நாகை நோக்கி நகர தொடங்கியுள்ளது.

    அந்தமான் அருகே வங்க கடலில் உருவான கஜா புயல் கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா நடுவே 15ஆம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முதலில் தெரிவித்திருந்தது.

    Gaja cyclone coming towards west direction

    ஆனால், அது தென்மேற்கு திசை நோக்கி நகர தொடங்கியதால் பாம்பன் மற்றும் கடலூர் நடுவே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனால் சென்னை நகரம் புயல் பாதிப்பில் இருந்து தப்பியதாக வானிலை அதிகாரிகள் நினைத்தனர். ஆனால் தென் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்த கஜா புயல் இன்று பகல் 12 மணியளவில் திடீரென மேற்கு நோக்கி நகரத் தொடங்கியது.

    இதனால் நாகை மற்றும் சென்னைக்கு நடுவே புயல் கரையை கடக்க கூடுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆரம்பத்திலிருந்தே கஜா புயல் குழப்பிக் கொண்டே இருப்பதால் அடுத்து வானிலை இலாகா என அறிவிப்பு வெளியிட போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    மாலையில் நிருபர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயககுநர், பாலச்சந்திரன், புயல், பாம்பன் மற்றும் நாகை நடுவேதான் கரையை கடக்கப்போகிறது என்று அறிவித்தார். இதன்பிறகே சென்னைவாசிகள் நிம்மதியடைந்தனர். சென்னையை பொறுத்தளவில், பெரிய பாதிப்பு ஏற்படாது என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    [வேகமாக வீசும் காற்று.. கஜா புயலால் சென்னை, புதுவையில் கடல் சீற்றம்.. மக்கள் பீதி ]

    English summary
    Gaja cyclone coming towards west direction instead of south west direction.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X