சிதைந்து கொண்டு இருக்கும் காந்தியின் கனவு...பெண்ணுக்கு அஹிம்சை ஆயுதம் பயன்படுகிறதா?
சென்னை: இந்தியாவில் என்று நடு இரவில் பெண்கள் நகை அணிந்து தனியாக செல்கின்றனரோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக உணரப்படும் என்று சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தியடிகள் கூறி இருந்தார். அந்த சுதந்திரம் இன்னும் பெண்களுக்கு எட்டாத கனியாகவே இருந்து வருகிறது.
அஹிம்சை என்ற ஆயுதம் வலிமைமிக்கது என்று காந்தியடிகள் கூறி இருந்தார். ஆனால், அந்த வலிமைமிக்க ஆயுதம் இன்று பெண்களுக்கு பயன்படுகிறதா?

கறை
2012ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற நிர்பயா பாலியல் சம்பவம், உத்தரப் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்து இருக்கும் தலித் பெண் பாலியல் சம்பவங்கள் பாரத தேசத்தின் மீது கறைகளாக படிந்து இருக்கின்றன. இந்தக் கறைகளை துடைப்பதற்கு இந்த சமுதாயம் என்ன செய்யவிருக்கிறது.

காந்தி கனவு
நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் சமீபத்தில் தூக்கில் போடப்பட்டார்கள். இதை நாடே அறியும். ஆனால், அதற்குள் உத்தரப் பிரதேசத்தில் நடந்து இருக்கும் சம்பவம் நாட்டின் மனசாட்சியை உலுக்கிப் பார்ப்பதாக இருக்கிறது. பாலியல் நடந்து இருப்பது தடயவியல் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், இல்லை என்று போலீஸ் அதிகாரி கூறுகிறார். காந்தியடிகளின் கனவு இங்கு சிதைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களை இங்கு உதாரணத்திற்கு சொல்ல வேண்டியதாக இருக்கிறது. இதற்கு முன்னதாக ஐதராபாத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையும் நம்மை விட்டு அகலவில்லை. தொடர்ந்து அவலங்கள் நடந்து வருகின்றன.

கல்வி
பெண் அடிமைத்தன்மை, வரதட்சணை, பணிக்கு செல்லக் கூடாது என்ற அடக்குமுறை, சமத்துவம் அளிக்க மறுப்பது, ஆண்களுக்கு இணையாக சமமாக ஏற்றுக் கொள்ள மறுப்பது, பெண்கள் என்றாலே ஆண்களுக்கு அடிபணிந்து செல்ல வேண்டும் என்ற இறுமாப்பு, கல்வி மறுப்பு என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

பள்ளியில்
இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும்போது சமுதாயம், பார்க்கும் பார்வையில் கோளாறு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வீட்டில் ஆண், பெண் குழந்தை இருக்கும்பட்சத்தில் இருவரையும் சமமாக நடத்த வேண்டும். பெற்றோர் அவ்வாறு நடத்தும்போது, வீட்டில் இருந்தே அந்த மனப்பான்மை வளரும். இது சமுதாயத்தில் பிரதிபலிக்க உதவும். பள்ளிகளிலும் சரி சமம் என்ற போக்கை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும்.

ஆளுமை
பெண் குழந்தைக்கு மன தைரியத்தை சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். ஆணுக்கு இணையாக வளர்க்க வேண்டும். பெண்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலை பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும். தனியாக அவளுடைய கஷ்டங்களை எதிர்கொள்ள ஆலோசனை வழங்க வேண்டும். ஆளுமைகளை, அவளுடையே பிரச்சனையை அவளே எதிர்கொள்ள கற்றுக் கொடுக்க வேண்டும்.

குற்றம்
இன்னும் உலகம் முழுவதும் பெண்கள் சிதைக்கப்பட்டு வருகின்றனர். நாட்டில் தினமும் 88 பாலியல் பலாத்காரங்கள் நடைபெறுகின்றன என்கிறது தேசிய குற்ற ஆணையம். நாட்டில் பெண்களுக்கு எதிராக 7.3% அளவிற்கு 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டில் அதிகரித்து இருக்கிறது என்று இந்த ஆணையம்.

பகலில்
இன்று பகலில் தனியாக செல்லும் பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறபோது, இரவில் செல்லும் பெண்ணுக்கு எவ்வாறு பாதுகாப்பு கிடைக்கும். இதைத் தடுக்க அரசுகள் எடுத்து இருக்கும் நடவடிக்கை என்ன? ஏன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடருகிறது? என்று ஒவ்வொருவரும் ஆராய வேண்டும். சிந்திக்க வேண்டும். தடுப்பதற்கு சமுதாயம் ஒன்று திரள வேண்டும்.

கடமை
பெண்கள் கால் பதிக்காத துறைகளும் இல்லை. கல்வியை கொடுக்கிறோம் வா என்று கூறுவதற்கு அரசாங்கம் எதற்கு, பெண் குழந்தைக்கு கல்வி அறிவு கொடுக்க வேண்டியது ஓவ்வொரு பெற்றோரின் கடமை. அத்துடன் துணிச்சலையும் கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்ணுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை, அநீதிகளை தட்டிக் கேட்க சமுதாயம் ஒன்று திரண்டால்தான், காந்தி கண்ட கனவும் நனவாகும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications