சென்னையில் பட்டாசு வெடிக்க தடை! நாளை விநாயகர் சிலையை வழிபடுவது எப்படி? 11 கண்டிஷன் போட்ட காவல்துறை
சென்னை: விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் விநாயகர் சிலை வைத்து வழிபடும்போது பட்டாசு வெடிக்க கூடாது என்பது உள்பட 11 முக்கிய கண்டிஷன்களை சென்னை மாநகர போலீஸ் போட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த வேளையில் பொதுமக்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்வார்கள்.

இந்நிலையில் தான் சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் வைத்து வழிபட 11 முக்கிய கண்டிஷன்களை போலீசார் போட்டுள்ளனர். இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
* விநாயகர் சிலைகள் நிறுவம் இடத்தின் நில உரிமையாளர்கள் சம்பந்த்பப்டட் உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசு துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
* தீயணைப்புத்துறை, மின்வாரியம் ஆகியவற்றிடம் இருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.
* சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளிடம் விநாயகர் சிகைளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைப்பிடிக்க உறுதியளித்து அனுமதி பெற வேண்டும்.
* நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்தில் இருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.
* பிற வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.
* மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும் கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது.
* சிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு தன்னார்வலர்களை 24 மணிநேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.
* நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான பலகைகள்/விளம்பர தட்டிகள் வைக்கக்கூடாது.
* தீ பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மின்சார சாதனங்கள் பந்தல்களை அவ்வப்போது கண்காணித்து விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கவனித்து கொள்ள வேண்டும்.
* விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதித்த நாட்களில் மட்டுமே செல்ல வேண்டும். அப்போது அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில், அனுமதிக்கப்பட்ட 4 சக்கர வாகனங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை எடுத்து செல்ல வேண்டும்.
* விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை.
இவ்வாறு 11 கண்டிஷன்களை முறையாக பின்பற்ற வேண்டும். பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை பாயும் என சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications