விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது.... வீட்டிலேயே கொண்டாடுங்க - தமிழக அரசு உத்தரவு
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த தமிழக அரசு தடை விதித்தது. வீடுகளில் சிறிய அளவில் சிலை வைத்து வழிபாடு செய்யலாம் என்று கூறியது. பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் அரசின் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. வழிபடத்தான் அனுமதி கேட்கிறோம் ஊர்வலமாக செல்லமாட்டோம் என்று கூறி வருகின்றனர் இந்து முன்னணியினர்.

அரசின் இந்த உத்தரவை மீறி ஒன்றரை லட்சம் விநாயகர் சிலை வழிபாடு நடத்துவோம் என்று இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கூறி வருகின்றன. அந்த சிலைகளை நீரில் கரைத்துதான் ஆகவேண்டும்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளையும், அரசின் உத்தரவு சரியே என்று தீர்ப்பு வழங்கியது. எனினும்,
தடையை மீறி விநாயகர் சிலை வைத்து வழிபடுவது உறுதி என்று கூறியுள்ளது இந்து முன்னணி.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி தொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 22.8.2020 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.7.2020 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிமன்றமும் அரசின்
ஆணையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என ஆணையிட்டுள்ளது. எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றி, கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications