Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேஸ் சிலிண்டர் வேணுமா? ஆதார், வங்கி பாஸ்புக் போதுமே.. உஜ்வாலா எல்பிஜி திட்டத்தில் இலவச இணைப்பு ரெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், ஏழை மக்களுக்கு இலவச சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் பணியை, எண்ணெய் நிறுவனங்கள் துவங்கி உள்ளன. தற்போது இதுகுறித்த குட்நியூஸ் ஒன்று வெளியாகியிருக்கிறது.. இதுகுறித்து அதிகாரிகள் சொல்வதென்ன? அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

இந்தியாவில் பெண்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், ஏராளமான நலத்திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.. அதில் ஒன்றுதான், "பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா" திட்டமாகும்..

Gas Cylinder PM Ujjwala Yojana Free Gas Connection

இதன்மூலம், பயனாளிகளுக்கு கேஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்குகிறது. மத்திய அரசு 2016ல் இந்த திட்டத்தை ஆரம்பித்ததுடன், இத்திட்டத்தை பெறுவதற்கான சில தகுதிகளையும், அளவுகோல்களையும் நிர்ணயித்து.. அதன்படி உஜ்வாலா திட்டத்தின் பலனை கோடானு கோடி பேர் பெற்று வருகிறார்கள்.

நாட்டின் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான சமையல் வசதியை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்..

உஜ்வாலா கேஸ் சிலிண்டர்

அதுமட்டுமல்ல, உஜ்வாலா யோஜனா திட்டத்தின் அடித்தளமே, குறைந்த வருமானம் கொண்ட குடும்ப பெண்கள் சுத்தமான மற்றும் எரிசக்தி பாதிப்பில்லாத சமையல் வசதியை பெறுவதாகும். இதன் மூலம், இந்த பெண்கள் தங்கள் குடும்பங்களுக்காக பாதுகாப்பான உணவு தயாரிப்பதில் வசதியாக இருக்க முடியும்.

இந்த திட்டத்தில், தமிழகத்தில் ஏற்கனவே 40 லட்சம் பேருக்கு இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஏழை மக்களுக்கு இலவச சமையல் காஸ் சிலிண்டர் இணைப்புகளை வழங்கும் பணிகள் தற்போது முழுமையாக துவங்கியுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டின் நிலவரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு கடந்த அக்டோபரில், பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக 25 லட்சம் புதிய இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதாக குட்நியூஸ் வெளியிட்டிருந்தது..

கேஸ் ஏஜென்சிகள்

இதையடுத்து தமிழகத்தில் ஏழை மக்களுக்கு இலவச கேஸ் இணைப்புகளை வழங்கும் பணிகள் தற்போது ஜரூராக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. .

இலவச காஸ் இணைப்புகளை பெற விரும்பும் ஏழை பெண்கள், தங்கள் ஆதார் எண், வங்கி கணக்கு புத்தக நகல் உள்ளிட்ட அடிப்படை ஆவணங்களுடன், வீடுகளுக்கு அருகிலுள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் காஸ் ஏஜன்சிகளை நேரடியாக அணுகலாம். இது அவர்களுக்கு சமையல் செலவுகளை குறைத்து, பாதுகாப்பான சமையல் சூழலை வழங்கும் வகையில் உதவும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்..

நம்முடைய தமிழ்நாட்டிலும் இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளது.. அதிகமான ஏழை மக்களுக்கு இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன..

ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும்

எனவே பொதுமக்கள் திட்டத்தின் விவரங்களை தெரிந்து கொண்டு, விருப்பமான ஏஜன்சியில் சென்று அவர்களுக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தால், இலவச கேஸ் இணைப்புகளை பெறலாம். இதனால், நாட்டின் ஏழை மக்களுக்கு பாதுகாப்பான சமையல் வசதி வழங்கப்படுவதுடன், குடும்பங்களின் சுகாதார நிலை மற்றும் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் உதவும்.

இந்த திட்டம், பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், சமூக வளர்ச்சியிலும் பெரிய பங்களிப்பாகும்.

இதன் மூலம், தமிழகத்தில் அதிகமான ஏழை மக்கள் 'உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்புகளை பெற முடியும் என்பதால், பல குடும்பங்களின் வாழ்க்கை தரம் மேலும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதிகள் - சான்றிதழ்கள்

இத்திட்டத்தின் பலனை பெற வேண்டுமானால், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குடும்பத்தில் ஏற்கனவே கேஸ் இணைப்பு இல்லாமலும் இருக்க வேண்டும். SC/ST, MBC, AAY, PMAY பயனாளிகள், BPL பெண்கள் தகுதியுடையவர்கள். ஆதார், ரேஷன் கார்டு, வங்கி விவரங்கள் அவசியம். https://www.pmuy.gov.in இணையதளத்தில் விண்ணப்பித்து, ஒப்புதல் பெற்ற பின் இலவச அடுப்பு மற்றும் LPG சிலிண்டர் வழங்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+