வீட்டு கேஸ் சிலிண்டர்களில் வந்த திடீர் மாற்றம்.. இனி இதை செய்தே ஆகணுமாம்.. அவங்களை விடாதீங்க.. சபாஷ்
சென்னை: கேஸ் சிலிண்டர்கள் குறித்து, முக்கிய அதிரடியை இந்தியன் ஆயில் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.. இதற்கான அறிவிப்பையும், அறிவுறுத்தல்களையும் நிறுவனம் வழங்கியிருக்கிறது. இது பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை தந்து வருகிறது.
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், பல்வேறு அதிரடிகளை அறிவிப்புகளை, நுகர்வோர்களின் வசதிக்காக அறிவித்தபடியே உள்ளது..

இந்த நிறுவனம், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும்கூடிய, சமையல் காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால், இரண்டிற்கும் ஒரே வகையான ரெகுலேட்டரும், ரப்பர் குழாயும் பயன்படுத்தப்படுகிறது.
தரமான குழாய்கள்: இவைகளில், வீடுகளுக்கான ரெகுலேட்டர், ரப்பர் குழாயை, இந்தியன் ஆயில் நிறுவனமே விற்பனை செய்கிறது.. அவை அதிக பாதுகாப்புடன் தரமாக உள்ளன என்றாலும், வீடுகளுடன் ஒப்பிடும்போது, வணிக பயன்பாட்டிற்கு சிலிண்டர் சற்று அதிகமாகும்.. அதனால்தான், வணிக சிலிண்டருக்கும், புது ரெகுலேட்டரை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.
சில மாதங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸையும், இந்தியன் ஆயில் நிறுவனம் தந்திருந்தது. வழக்கமாக, 5 வருடத்துக்கு ஒரு முறை கேஸ் சிலிண்டர் ரப்பர் குழாயை மாற்ற வேண்டும். ஆனால், பலரும் அந்த ரப்பர் குழாயை மாற்றுவதில்லை.. இப்படி, ரப்பர் குழாய்களை மாற்ற வேண்டிய கஸ்டமர்களின் விபரம், கேஸ் ஏஜன்சிகளிடம் உள்ளது. எனவே, அவர்களை தொடர்பு கொண்டு, ரப்பர் குழாய் மாற்றும்படி அறிவுறுத்தியிருந்தது.
சிறப்பு சலுகைகள்: அதுமட்டுமல்ல, இவைகளுக்கு சிறப்பு சலுகையாக, ரப்பர் குழாய் விலையை 190 ரூபாயிலிருந்து, 155 ரூபாயாக குறைத்தும் சர்ப்ரைஸ் தந்திருந்தது.. இந்த ரப்பர் குழாய் சலுகையானது வாடிக்கையாளர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியை அப்போது தந்திருந்தது.. இந்நிலையில், வாஷர், வால்வு போன்றவை சரியாக பொருத்தப்பட்டுள்ளதா? காஸ் சிலிண்டரை சரிபார்த்து வாங்க அறிவுரையை வழங்கியிருக்கிறதாம் இந்தியன் ஆயில் நிறுவனம்.
காஸ் அடுப்பு மற்றும் சிலிண்டரை இணைக்க ரப்பர் குழாய், ரெகுலேட்டர் பயன்படுத்தப்படுகிறது. சில சிலிண்டர்களில் ரெகுலேட்டர் இணைக்க கூடிய இடத்தில் உள்ள, "வாஷர், வால்வு" சரியாக பொருத்தப்படாமலேயே உள்ளது... இதை சரிபார்க்காமல் வாடிக்கையாளர்களும் வாங்கிவிடுகிறார்கள்.. கேஸ் அடுப்பை, 'ஆன்' செய்யும்போதுதான், காஸ் கசிவு தென்படுகிறது..
வால்வு சரியா இருக்கா: இதைத்தடுப்பதற்காக டெலிவரி செய்யும்போதே சிலிண்டரில், வாஷர், வால்வு சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து வழங்குவதை, இந்தியன் ஆயில் கட்டாயமாக்கி உள்ளது. எனவே, சிலிண்டர் எடுத்து வரும் ஊழியர்களிடம் சோதனை கருவிகள் உள்ளதால், அதை பயன்படுத்த சொல்லி, சிலிண்டரில் வாஷர், வால்வு சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும்.
இதற்கான கருவிகள் ஊழியர்களுக்கு தராளமாகவே வழங்கப்பட்டிருக்கின்றன.. ஒருவேளை, வாஷர், வால்வு சரியாக இல்லாத சிலிண்டர்கள் இருந்தால், அதனை டெலிவரி வாங்காமல் திருப்பி அனுப்பிவிடலாம். இதற்கு பதிலாக வேறு சிலிண்டர் சரிபார்த்து வழங்கப்படும்... இந்த சோதனைகளை செய்யாமல், சிலிண்டர் வாங்க வேண்டாம் என்றும் சோதனை செய்ய மறுக்கும் ஊழியர்கள் குறித்து சிலிண்டர் ரசீதில் உள்ள தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ரப்பர் குழாய்: 5 ஆண்டுக்கு மேல் ரப்பர் குழாய் பயன்படுத்துவோரும் காஸ் ஏஜென்சிகளை அணுகி, ரப்பர் குழாயை மாற்றி கொள்ளலாம் என்றும் கேஸ் அடுப்பு சரியான இடத்தில் இருக்கிறதா, ரெகுலேட்டர் சரியாக சிலிண்டரில் இணைக்கப்பட்டு உள்ளனவா உள்ளிட்ட சோதனைகளையும் ஊழியர்கள் செய்வார்கள் என்றும் நிறுவனம் தரப்பில் கேட்டுக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டரை இணைக்கும் ரப்பர் குழாயின் ஆயுட்காலம், வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே.. எனவே, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என்றும் நல்ல முறையில் இருந்தால் பயன்படுத்தலாம். இல்லையெனில், உடனே மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரப்பர் குழாய் பார்ப்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது என்று கருதாமல், 5 ஆண்டுகளுக்குள் அகற்றிவிட்டு, புதிதாக பொருத்த வேண்டும் என்றும் நிறுவனம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications