மக்கள் வரி பணத்தில் இசட் பிரிவு பாதுகாப்பு மட்டும் சரியா.. அப்போ "பேனா சிலையும்" சரிதான்! காயத்ரி

இசட் பிரிவு பாதுகாப்புக்கு செலவிடும்போது பேனா சிலைக்கு வரிப்பணம் செலவிடக் கூடாதா- காயத்ரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசட் பிரிவு பாதுகாப்புக்கு செலவிடும் போது பேனா சிலைக்கு வரிப் பணத்தை பயன்படுத்துவது சரிதான் என பாஜக தலைவர் அண்ணாமலையை அக்கட்சியிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளாக பாஜகவில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய காயத்ரி ரகுராம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தொடர்ந்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பேசி வந்தார்.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் காயத்ரி ரகுராமே கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து தான் துபாய் ஹோட்டலில் என்ன செய்தேன் என 150 பேர் முன்பு கொச்சையாக பேசிய அண்ணாமலை தன்னுடன் ஒற்றைக்கு ஒற்றை விவாதிக்க தயாரா என கேள்வி எழுப்பினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி

அது போல் ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலை தைரியம் இருந்தால் போட்டியிடட்டும் , அவரை எதிர்த்து நான் போட்டியிடுகிறேன் என காயத்ரி சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிடுவதாகவும் அவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளதாகவும் ட்விட்டரில் காயத்ரி தெரிவித்திருந்தார்.

சென்னை மெரினா

சென்னை மெரினா

இந்த நிலையில் சென்னை மெரினா கடலில் ரூ 81 கோடி செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்கு நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம், பாஜக, சட்ட பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார்.

வரிப்பணம்

வரிப்பணம்

அதில் அவர் மக்களின் பல லட்சம் வரிப்பணம் ஒரு மாநிலத் தலைவரின் இசட் பிரிவுப் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்படும்போது, தமிழ்நாடு மக்களின் வரிப் பணம் ஜனநாயகத்தைக் குறிக்கும் பேனா சிலைக்கு பயன்படுத்துவது சரிதான் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது மற்றொரு பதிவில், பேனாவுக்கு ஏன் பொதுமக்களின் பணம்? இந்த பேனா சிலை வித்தியாசமானதாகவும், ஒரு சுவாரஸ்யமான சுற்றுலா தலமாக இருந்தால், சுற்றுலா மூலம் அரசாங்கம் லாபம் ஈட்டினால் அதை அரசுப் பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கு அல்லது மருத்துவமனைகளுக்கு பயன்படுத்தலாம். அது அரசாங்கத் திட்டத்தைப் பொறுத்தது என்று பதிவிட்டுள்ளார்.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றைய பதிவில் பேனா பொதுவானது, பேனா சிலைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது வெறும் பேனாவாக இருக்கக் கூடாது. அனைவரும் சுற்றுலா பார்வையிடக் கூடிய புதிய ஹாலோகிராபிக் அல்லது லேசர் நிகழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் வரலாற்று பேனாவாக இருக்க வேண்டும். இது சுற்றுலா பயணிகளுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் பேனா என்பது பல விஷயங்களைக் குறிக்கும். பேனா ஒரு சிறந்த கருவியாகும். சிறந்த அர்த்தத்தைக் கொண்டுள்ளது. அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். புயல்களால் கூட சேதப்படுத்த முடியாத இந்த பேனா வலுவாக இருக்க வேண்டும். இந்த பேனா ஜனநாயகக் குரலாக இருக்க வேண்டும் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். பேனா சின்னத்திற்கு எதிராக பாஜக இருந்து வரும் நிலையில் அக்கட்சி நிர்வாகிகளை வெறுப்பேற்றும் விதமாக காயத்ரி ரகுராம் பேனா சிலைக்கு ஆதரவாக பேசி வருகிறார். காயத்ரியின் இந்த ட்வீட்டுகளை பார்த்த நெட்டிசன்கள், "என்ன அடுத்து திமுகவில் ஐக்கியமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அது போல் அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு குறித்து காயத்ரி ஏற்கெனவே ஒரு முறை விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+