அண்ணாமலை என் போனை கட் செய்தார்.. திமுக "அண்ணனை" நான் சந்தித்தது ஏன்? காயத்ரி ரகுராம் விளக்கம்
சென்னை: திமுக பிரமுகரை நான் ஒரு பர்த்டே பார்ட்டியில்தான் பார்த்தேன். அவர் என்னை நலம் விசாரித்தார், நான் அவரை விசாரித்தேன். ஆனால் பாஜக நிர்வாகிகளோ நானும் அவரும் ஹோட்டலில் சந்தித்தோம் என்கிறார்கள். இது மிகவும் கொச்சையான விஷயம் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காயத்ரி ரகுராம் தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில், "துபாயில் ஹோட்டலில் காயத்ரி என்ன செய்தார் என எனக்கு தெரியும். நான் வெளியே சொன்னால் அசிங்கமாகிடும்" என என் கேரக்டரையே கேவலப்படுத்தும் அளவுக்கு 150 பேருக்கு முன்பு அண்ணாமலை குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இத்தனைக்கும் என்னை அக்கா அக்கா என அழைப்பவர் அண்ணாமலை.
அப்படியிருக்கும் போது அக்காவை பற்றி இப்படி கொச்சையாக பேசலாமா? வார் ரூமில் இருந்து என்னை கடந்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து டிரோல் செய்து வருகிறார்கள். திருச்சி சூர்யா சிவா ஆடியோ விவகாரத்தில் டெய்சியை ஆதரித்து நான் சூர்யாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அண்ணாமலை
நான் உடனே அண்ணாமலைக்கு போன் செய்து பேசினேன். ஆனால் என் பக்க்தில் இருக்கும் விளக்கத்தை அவர் கேட்க தயாராக இல்லை. உடனே உங்ககிட்ட பேசி பிரயோஜனம் இல்லை என கூறி என் போன் காலை அண்ணாமலை துண்டித்தார். இதற்கு அடுத்த நாளே என்னை கட்சியிலிருந்து நீக்கினார்கள். கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி பாஜக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நான் துபாய் ஹோட்டலில் திமுக பிரமுகருடன் இருந்தேன் என என்னை பற்றி அண்ணாமலை கொச்சையாக பேசியிருந்தார். இதை என்னிடம் பலர் கூறினர்.

எல் முருகன்
என்னை எல். முருகனின் ஆதரவாளராக அண்ணாமலை நினைத்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை. அதனால் என்னை கார்னர் செய்தார். நான் தமிழிசை, எல் முருகன், பொன்னார், எச் ராஜா, வானதி ஆகியோருடன் எல்லாம் பணியாற்றியிருக்கிறேன். நான் யாருடைய ஆதரவாளரும் கிடையாது. மோடிஜியின் ஆதரவாளர். என்னை பற்றியும் அலிஷாவையும் பற்றியும் 60 நிமிஷம் ஆடியோ வீடியோ இருக்கு என திருச்சி சூர்யா சொல்கிறார்கள். இதை போலீஸார் விசாரிக்க வேண்டும்.

கிசு கிசு வேறு
சினிமா துறையில் கிசுகிசு வேறு இந்த ஹனி டிராப் வேறு. அண்ணாமலை மீது நான் கேஸ் கொடுக்க போகிறேன். துபாய் ஹோட்டலில் என்ன நடந்தது என்றால் ஒரு நிகழ்ச்சிகாக நான் என்னுடன் இரு பாஜக நிர்வாகிகள் சென்றோம். நிகழ்ச்சிக்கு 4, 5 நாட்களுக்கு முன்னாடி செல்கிறோம். அங்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது டைகர் ரவி என்ற ஒருவரால் ஒரு பிரச்சினை வருகிறது. இதையடுத்து அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் நானும் இரு பாஜக நிர்வாகிகளும் சென்னைக்கு வந்துவிட்டோம்.

திமுக பிரமுகர்
அவர்கள் சொல்லும் திமுக பிரமுகரை (பெயரை குறிப்பிட்டு அண்ணன் என அழைக்கிறார்) நான் சந்தித்தது சென்னையில் ஒரு பர்த்டே பார்ட்டியில்தான். இவர்கள் சொல்வது போல் ஹோட்டலில் அல்ல. அந்த பார்ட்டியில் என்னை பார்த்ததும் அவரே வந்து ஹாய் , ஹலோ எப்படி இருக்கீங்க என பேசினார். நானும் நலம் விசாரித்தேன். எங்கள் குடும்பத்திற்கே அவரை தெரியும். அவர் நலம் விசாரிக்கும் போது அவர் திமுக என்பதால் நான் அவரை கத்தியாலா குத்த முடியும். அண்ணாமலை வந்தவுடன் ஹனிடிராப் வீடியோவால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒருவர் வீட்டு பெட்ரூமில் கேமரா வைப்பது எத்தனை அபத்தம்?

கே.என்.நேரு வீட்டு விசேஷம்
அண்ணாமலையும்தான் திமுக அமைச்சர் கே.என். நேரு இல்ல திருமணத்திற்கு சென்றுள்ளார். கார்த்தி சிதம்பரத்துடன் செல்பி எடுத்துள்ளார். அப்போது அதெல்லாம் தவறு என்று சொல்ல முடியுமா? ஒரு நிர்வாகிகள் கூட்டத்தில் யாரும் திமுகவுடன் பேசக் கூடாது, அவர்களின் வீட்டு திருமணங்களுக்கு செல்லக் கூடாது என கூறிவிட்டு இவரே நேரு வீட்டு திருமணத்திற்கு செல்கிறார். அதை நான் கேட்க மாட்டேனா? இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications