மக்களே புகார் அளிக்காதபோதும்.. ஜி ஸ்கொயரில் ரெய்டு, ஆருத்ரா மோசடியில் ஏன் இல்லை?- காயத்ரி ரகுராம்
சென்னை: ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை இன்று காலை தொடங்கிய நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள நடிகை காயத்ரி ரகுராம், ஆருத்ரா மோசடி விவகாரத்தையும் சுட்டிக்காட்டி அண்ணாமலையை விமர்சித்து உள்ளார்.
பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து சென்னை, கோவை, திருச்சி உள்பட தமிழ்நாட்டில் ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய 50 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் வருமான வரிசோதனை நடைபெற்றது.

சென்னையில் சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 30 க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் சென்னை நீலாங்கரையில் உள்ள ஜிஸ்கொயர் நிறுவனத்தின் நிர்வாகி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. 2017 ஆம் ஆண்டு முதல் 2020 வரை நிறுவனம் இழப்பில் இயங்கி வருவதாக கணக்கு காட்டப்பட்டு இருக்கும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் புதிய முதலீடுகளுக்கு பணம் கிடைத்தது குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் பாஜக முன்னாள் நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம், இந்த விவகாரத்தை தொடர்புபடுத்தி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து உள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "உண்மை என்ன? ஜி- ஸ்கொயர் 38,000 கோடி நிறுவனத்தைக் கொண்டுள்ளது என்று அண்ணாமலை சொன்னது அதன் ரெய்டு என்ன ஆனது? அல்லது அண்ணாமலை சொன்னது வெறும் பொய்யா? பொறுத்திருந்து பார்ப்போம்." என்று பதிவிட்டு உள்ளார்.
மற்றொரு பதிவில், "ஹனிட்ராப்களுக்குப் பிறகு ஆடியோ வீடியோ பதிவு உத்திகள் பார்த்த பிறகு, மற்றவர்களை அவதூறு செய்ய அதிக பணம் செலவழிப்பதைப் பார்த்த பிறகு வார்த்தைகள், நம்பிக்கை, விசுவாசம், உண்மையான தகவல்கள் போய்விட்டன. பணம் கொடுத்து அவதூறு செய்பவர்கள் ஆகியோரின் கைகளில் அரசியல் இருக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் மீது ஏன் வருமான வரி சோதனை நடத்தவில்லை?
மற்றவர்களை இழிவுபடுத்துவதற்காக அவர்கள் எப்படி கோடி கோடியாக பணம் சம்பாதிக்கிறார்கள் யார் அந்த பணத்தை தருகிறார்கள்? அப்படிப்பட்ட தலைவர்களை தமிழகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழக்கும் பொறுப்பற்ற தலைவர். இந்த குறுக்கு வழியில் வளர முயற்சிக்கிற வஞ்சக மனப்பான்மை கொண்ட தேசிய கட்சி மேனேஜரையும் இப்போதே தூக்கி எறிய வேண்டும்.

ஒரு நிறுவனம் தேசிய அளவில் வளர்ச்சியடைந்தால் அதை மேக் இன் இந்தியா என்று அழைப்பார்கள். ஆனால் ஒரு நிறுவனம் மாநில அளவில் குறுகிய காலத்தில் வளரும் போது அது தவறா? அம்பானி அதானியின் வளர்ச்சியை நாம் பார்க்கும்போது பெருமைப்படுகிறோம், அதை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் ஏன் ஒரு தமிழர் வளரும் போது பொறாமை கொள்கிறோம்?
ஜி ஸ்கொயர் உரிமையாளர் யார்? அவர்கள் சுத்தமாக வெளியே வருகிறார்கள் என்றால் என்ன? அவர்கள் சுத்தமாக வெளியே வரவில்லை என்றால் என்ன? வருமான வரித்துறை செய்யட்டும் அதன் வேலையை. திமுக மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அரசியல் வளர்ச்சிக்காக முன்வைத்தவர் அண்ணாமலை மட்டுமே. ஜி ஸ்கொயர் மீது இதுவரை பொதுமக்கள் புகார் அளிக்கவில்லை. ஆனால் மக்கள் பணம் ஆருத்ரா மோசடி நிறுவனத்திற்கு என்ன ஆனது? விசாரணை அமைதியாக உள்ளது. மக்கள் தங்கள் பணத்தை திரும்ப பெறுவார்களா?
ஆருத்ரா மோசடி நிறுவன பிரச்சினை போன்ற மக்கள் பிரச்சனைகளில் கலந்துகொள்ள வருமான வரி மற்றும் அமலாக்கத்துறையை நான் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அரசியலில் தனது சொந்த வளர்ச்சிக்காக அண்ணாமலை திமுக மீதான குற்றச்சாட்டுகளை மட்டும் கண்டுகொள்ளாதீர்கள். தயவு செய்து மக்கள் பிரச்சனையில் கலந்து கொள்ளுங்கள். ஆருத்ரா ஹரிஷ் பாஜக மாநில பொறுப்பாளராக இருந்தார். கட்சி பதவிக்காக பணம் கொடுத்ததாக பல தகவல்கள் கூறப்பட்டன. நாங்கள் உண்மையை அறிய விரும்புகிறோம். அதன் பிறகு எல்லாம் அமைதியாக இருக்கிறது. மக்களின் பணம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications