சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாராயணனை அனுப்புறேன்.. விவாதத்திற்கு அழைத்தும் மறுத்த அண்ணாமலை.. 10 நிமிடம்.. அறைக்குள் என்ன நடந்தது

Google Oneindia Tamil News

சென்னை: இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடியின் சென்னை வருகை குறித்தும், அதில் முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்தும் பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். முதல்வர் ஸ்டாலினின் உரையை விமர்சனம் செய்து அண்ணாமலை இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசினார். இதில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அண்ணாமலை செய்தியாளர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

சாலை நடுவில் பாஜக கொடிகளை நட்டது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதில் அளிக்காமல்... அண்ணாமலை அந்த செய்தியாளர்களை தாக்கி பேசினார். உங்களுக்கு அறிவாலயத்தில் இருந்து வர வேண்டிய 200 ரூபாய் வந்துவிடும் என்று அண்ணாமலை விமர்சனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர் கேள்வி எழுப்ப எழுப்ப.. உங்களுக்கு 1000 ரூபாய் வந்துவிடும்.. 2000 ரூபாய் வந்துவிடும் என்று கூறிக்கொண்டே சென்றார் அண்ணாமலை.

சூடம் கொளுத்தினால் வருவார்.. சீண்டிய அண்ணாமலை.. சூடாக பதிலடி கொடுத்த திமுக எம்.பி செந்தில் குமார்! சூடம் கொளுத்தினால் வருவார்.. சீண்டிய அண்ணாமலை.. சூடாக பதிலடி கொடுத்த திமுக எம்.பி செந்தில் குமார்!

குரங்கு

குரங்கு

அதன்பின் கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க அருகில் வந்த போது, மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள், என்று அண்ணாமலை கோபமாக கேள்வி எழுப்பினார். செய்தியாளர்களை பார்த்து மிகவும் கோபமாக அண்ணாமலை இப்படி பேசினார். இப்படி அண்ணாமலை ஒவ்வொரு முறையும் செய்தியாளர்களை அவமானப்படுத்தும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இன்றும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அண்ணாமலை கோபமாக பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சேனல் பேரு உங்க பேரு சொல்லுங்க

சேனல் பேரு உங்க பேரு சொல்லுங்க

இன்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் அவரின் ரபேல் வாட்ச் குறித்து கேட்கப்பட்டது. அதுவரை கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டு இருந்த அண்ணாமலை.. வாட்ச் பற்றி கேட்டதும் நிதானம் இழந்து பதற்றம் அடைந்தார். வாட்ச் பற்றி கேட்ட ஆங்கில ஊடகம் ஒன்றை சேர்ந்த செய்தியாளர்களிடம் தனது வாட்சை கழற்றி நீங்களே இதில் மைக் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். அதன்பின் இன்னொரு செய்தியாளர் கேட்டதற்கு என் பெயர் அண்ணாமலை.. நான் பாஜக தலைவர்.. நீங்க யார்.. உங்க பேரு என்ன.. சேனல் பேரு உங்க பேரு சொல்லுங்க என்று கோபமாக கத்தினார். பொதுவாக கேள்விகளுக்கு பதில் தெரியாத போதெல்லாம் சேனல் பேர் கேட்டு.. "நீங்க திமுக சேனல்" என்று சொல்லி அண்ணாமலை கேள்வியை புறக்கணிப்பதாக செய்தியாளர்கள் இடையே புகார் உள்ளது. அதை இன்று அவர் செய்ய முயன்றதாக கூறி செய்தியாளர்கள் கொந்தளித்தனர்.

எவிடென்ஸ்

எவிடென்ஸ்

அப்போது இன்னொரு செய்தியாளர் ஒருவர்.. நீங்கள் திமுக மீது ஊழல் புகார்கள் வைக்கிறேன் என்று கூறுகிறீர்கள். ஆனால் அதற்கு ஆதாரம் கொடுக்கவில்லையே. எப்போது ஆதாரம் கொடுப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு கோபம் அடைந்த அண்ணாமலை, பிஜிஆர் எனர்ஜி டாக்குமெண்டை நான் வெளியிடவில்லையா? நீங்கள் முடித்துவிட்டு என்னுடன் வாருங்கள். பிஜிஆர் எனர்ஜி டாக்குமெண்டை நான் கொடுக்கிறேன். உங்கள் சேனலில் 30 நிமிடம் அதை போடுவீர்களா என்று கேட்டார். அதற்கு அந்த செய்தியாளரும் ஆம் போடுவேன் என்றார். அதற்கு நீங்கள் அந்த ஆதாரத்தை போடுங்கள். நீங்கள் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக ஜிங்ஜாங் போடுகிறீர்கள். முடிந்தால் 30 நிமிடம் பிஜிஆர் எனர்ஜி டாக்குமெண்டை கவர் பண்ணுங்கள் என்று சவால் விட்டார். அதோடு நிற்காமல் அந்த செய்தியாளரை மிரட்டும் வகையில்.. நீ செய்தியாளரா என்று கேட்டு அண்ணாமலை மிகவும் மோசமாக பேச தொடங்கினார்.

வெளியே போயா வெளியே போயா

வெளியே போயா வெளியே போயா

அந்த செய்தியாளரை சுற்றி பாஜக நிர்வாகிகள் நின்று கொண்டு அவரை நெருக்கும் விதமாக பேசினார்கள். அதோடு அந்த செய்தியாளருக்கு எதோ போன் வர.. உனக்கு யார் போன் பண்ணா .. உனக்கு யார் போன் பண்ணா என்று மீண்டும் மீண்டும் அண்ணாமலை சொன்னதையே சொல்லிக்கொண்டு இருந்தார். அதன்பின் பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை அறைக்குள் சென்ற அந்த செய்தியாளரிடம்.. காட்டமான குரலில், செருப்பை கழற்றிவிட்டு வாருங்கள் என்று கூறி உள்ளனர். உள்ளே சென்றவரிடம் பிஜிஆர் நிறுவனத்தின் பைல்ஸ் என்று கூறி ஒரு பைலை அண்ணாமலை அவரிடம் கொடுக்க வந்துள்ளார். அதன்பின் இந்த பைல்ஸ் பற்றி விவாதம் நடத்த செய்தியாளர் அழைத்தார். விவாதம் என்றதும் அண்ணாமலை அதெல்லாம் வர முடியாது. நான் நாராயணனை அனுப்புகிறேன். நான் எல்லாம் விவாதத்திற்கு வர மாட்டேன் என்று கூறினார்.

செய்தி

செய்தி

அதோடு அந்த செய்தி நிறுவனத்தை கடுமையாக விமர்சித்தும் அண்ணாமலை பேசினார். இது தொடர்பாக அந்த செய்தியாளர் ஊடகங்களில் அளித்த பேட்டியில், 30 நிமிடத்தில் எங்களிடம் ஆதாரம் கொடுப்பதாக கூறினார் அண்ணாமலை. நான் உள்ளே சென்ற பின் மற்ற செய்தியாளர்களை அனுமதிக்காமல் தடுத்தனர். பிஜிஆர் பற்றி முழுமையாக ஆதாரங்களை கொடுப்பார் என்று எதிர்பார்த்தோம். 10 நிமிடத்தில் அவர் என்னை வெளியே அனுப்பினார். வெளியே போயா வெளியே போயா என்று கூறி என்னை வெளியே அனுப்பினார்கள். ஆனால் ஆதாரத்தை கொடுக்க வந்த அண்ணாமலை விவாதம் நடத்த வரவில்லை. நேர்காணலுக்கு நான் வரமாட்டேன் என்றார். நீங்களே தானே சேலஞ்ச் விடுத்தீர்கள். விவாதத்திற்கு வாருங்கள்.. நீங்களே அழைத்துவிட்டு விவாதிக்க மாட்டேன் என்றால் என்ன அர்த்தம் என்றேன்.

நீ பெரிய ஆளா?

நீ பெரிய ஆளா?

அதற்கு அவர்.. நீ என்ன பெரிய ஆளா.. நீ சொல்லி நான் வரணுமா.. நான் கட்சித் தலைவர். நான் எல்லாம் வர முடியாது. உன் சேனல் பெரிய சேனலா என்று கூறினார். அதற்கு நான் எங்களை மட்டமாக நினைத்தால் ஏன் எங்கள் சேனலை பேட்டிக்கு அழைக்கிறீர்கள் என்று கூறினேன். நீங்கள் வந்தால் நாங்கள் 30 நிமிடமோ 1 மணி நேரமோ செய்தி வெளியிடுகிறோம் என்றேன். அதை ஏற்றுக்கொள்ளாத அண்ணாமலை ஆதரவாளர்கள் வெளியே போயா வெளியே போயா என்று கூறி என்னை வெளியே அனுப்பினார்கள். கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெளியே அனுப்பினார்கள். என்னை பின்வாசல் வழியாக அனுப்பினார்கள். ஆனால் அண்ணாமலை தனது கையில் இருந்த பிஜிஆர் கோப்பை என் கையில் கொடுக்கவே இல்லை, என்று செய்தியாளர் விளக்கம் அளித்து உள்ளார்.

English summary
Get lost, Get out: BJP chief Annamalai supporters sent a reporter out of his office after challenging him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X