உயிரை பறித்த 'பேராசை'.. காலி ஆக்சிஜன் சிலிண்டர் விற்ற மருத்துவமனை ஊழியர் லாக்கப்பில்
மீரட்: உத்தரபிரதேசத்தில் காலி சிலிண்டரை பத்தாயிரம் ரூபாய்க்கு, அரசு மருத்துவமனை ஊழியர் விற்ற நிலையில், சில மணி நேரங்களில் அதை பயன்படுத்திய கொரோனா நோயாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நாடே கொரோனா தொற்றால் தத்தளித்துக் கொண்டிருக்க, இப்படியொரு சம்பவத்தை செய்திருக்கிறார் சஞ்சய் குமார் எனும் அரசு மருத்துவமனை ஊழியர்.
ஆப்ரேஷன் தியேட்டர் உதவியாளராக பணிபுரியும் இந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து வெள்ளிக்கிழமை அன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

பேரம் பேசிய ஊழியர்
குற்றச்சாட்டின் படி, கடந்த வியாழன் அன்று, கொரோனா நோயாளி ஒருவரின் உறவினர்களிடம் ஆக்சிஜன் சிலிண்டர் கொடுக்க ரூ.50,000 கேட்ட சஞ்சய், பேரத்துக்கு பிறகு ரூ.10 ஆயிரத்துக்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து இறந்த கொரோனா நோயாளியின் மனைவி மம்தேஷ் தேவி கூறுகையில், போதுமான ஆக்சிஜன் கிடைத்திருந்தால், என் கணவரை நிச்சயம் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், அவர் இறந்த பிறகு சோதித்த போது, அது காலி சிலிண்டர் என்பது தெரியவந்தது" என்றார்.

ஊழியர் கைது
இதையறிந்த உறவினர்கள், உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்தை வலியுறுத்தியதை அடுத்து, விரைந்து வந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சஞ்சய் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோதம்
இதுகுறித்து ஷாம்லி பகுதி எஸ்.பி. சுக்ரிதி மாதவ் கூறுகையில், "உயிரிழந்த நோயாளியின் பெயர் சத்யவான் சிங். அவரது உறவினர்களிடம் சட்டவிரோதமாக ஆக்சிஜன் சிலிண்டரை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார். எனினும், அந்த ஆக்சிஜனை பயன்படுத்திய அந்த நோயாளி உயிரிழந்துவிட்டார். இதையடுத்து நாங்கள் சஞ்சய் சிங்கை கைது செய்துள்ளோம்" என்றார்.

மக்களிடம் கொள்ளை
இதுபோன்று சட்டவிரோதமாக ஆக்சிஜன் வாங்குவது தவறு என்பதை மக்களும் உணர வேண்டும். உயிர் மிக மிக முக்கியம் என்றாலும், நாம் நேசிப்பவர் மூச்சுக் காற்றுக்காக துடித்துக் கொண்டிருக்கிறார் என்றாலும், நாம் இதுபோன்று சட்டவிரோதமாக வாங்குவது தவறு தான். தவறு என்பதை விட, நிச்சயம் ஏமாற்றப்படுவோம் என்பதை உணர வேண்டும். மக்களின் தேவையை பயன்படுத்தி, கொள்ளை அடிப்பதற்காகவே சஞ்சய் சிங் போன்று பலரும் உலாவிக் கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications