பெண்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்காதீர்கள்.. அது அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம்.. கனிமொழி அறிவுரை
பெண்கள் உரிமைகளை விட்டுக்கொடுப்பது அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம் என்று கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை: அன்பு, குடும்பம், கலாச்சாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக பெண்கள் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுப்பது அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம் என்று கனிமொழி அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், காலம் காலமாக யாரெல்லாம் ஒடுக்கப்பட்டார்கள் என்பதை அறிந்து அரசு உதவுவதற்காக ஜாதி சான்றிதழ் கேட்கப்படுவதாகவும் கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு - தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை விழாவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.
இந்த விழாவில் மாணவிகளிடையே திமுக எம்பி கனிமொழி பேசுகையில், பெண்கள் வேலைக்கு போக கூடாது என்ற நிலை இருந்தபோது, பெண்கள் ஆசிரியர்களாக பணி அமர்த்த வேண்டும் என பெரியார் தீர்மானம் இயற்றினார்.

கனிமொழி பேச்சு
கேரளாவில் திருவாங்கூர் தேவஸ்தானத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது பெண்கள் மேலாடை அணிய வரி விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தப்பட்ட பின் மேல் ஆடை அணிய அனுமதி கிடைத்தது. ஆனால் இன்று பெண்கள் இந்த உடையைத் தான் அணிய வேண்டும் என்று சொல்கிறார்கள். இன்று டிஜிட்டல் தொழில் நுட்பம் வளர்ச்சி மிக சிறப்பாக உள்ளது.

சைபர் தாக்குதல்
அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் தாக்குதலும் அதிகரித்து வருகிறது. அதை எதிர்த்து போராட வேண்டிய சூழல் இருக்கிறது. வளர்ச்சியை நாம் தடுக்க முடியாது. ஆனால் இது போன்ற தாக்குதலுக்கு எதிராக போராட்டம் மேற்கொள்ள வேண்டும். இன்று ஜாதி சான்றிதழ் எதற்கு என்று கேள்வி எழுப்புகிறார்கள். யார் யாரெல்லாம் காலம் காலமாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதை அறிந்து மக்களுக்கு உதவதான் ஜாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது.

ஜாதி சான்றிதழ் எதற்கு?
பள்ளி செல்லும் மாணவர்களுக்கு உதவி தொகை அரசு வழங்கவும் இட ஒதுக்கீடுகள் கொடுக்கவும்தான் ஜாதி சான்றிதழ். ஜாதி ஒழிக்க வேண்டும் என்றால் பெரும் போராட்டம் தேவைப்படுகிறது. நாம் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை என்று சொல்வதுதான் சமூக புரட்சி, ஒரு காலத்தில் மருத்துவ கல்லூரிகளில் படிக்க சமஸ்கிருதம் படித்து இருந்தால் தான் போக முடியும் என்று இருந்த நிலையை மாற்றியது நீதி கட்சியின் ஆட்சி. இந்தியாவிற்கே மருத்துத்துறையில் தமிழ்நாடு வழிகாட்டியாக இருக்கிறது என்றால் அன்று நாம் சமஸ்கிருதத்தை தூக்கி எரிந்ததுதான் காரணம் என்று தெரிவித்தார்.

முதுகெலும்பு
பெண் விடுதலையை அதிகம் பேசியவர் தந்தை பெரியார். சமூக மாற்றம் என்பது நம்மில் இருந்துதான் முதலில் வர வேண்டும், அது உங்களில் இருந்து வர வேண்டும். சமூக மாற்றம் என்பது துப்பாக்கி முனையில் இருந்து உருவாகாது, நம் முதுகெலும்பில் இருந்து உருவாக்கும். தயவு செய்து மாணவிகள் எழுந்து நின்று கேள்வி கேட்க வேண்டும். ஆண் பெண்ணுக்கு உள்ள உரிமை திருநங்கை மற்றும் அனைத்து பாலினத்தவருக்கும் கிடைக்க வேண்டும்.

பெண் ஏன் அடிமையானால்?
கல்வி, வேலைவாய்ப்பு அதிகளவில் வாய்ப்பு வழங்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த மாற்றம் முழுமையாக நடக்க வேண்டும். அதுவே என் ஆசை. தந்தை பெரியார் எழுதிய 'பெண் ஏன் அடிமையானால்?' புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும். பெண்கள் தொடர்ந்து சமூக புரட்சி செய்ய வேண்டும். எந்த நேரத்திலும் சமூக புரட்சி நிற்காது. ஆண்களுக்கு சரிசமமான எண்ணிக்கையில் பெண்கள் இருந்தும் இந்த சமூகம் பெண்களை மிதித்து கொண்டேதான் இருக்கிறது.

துரோகம்
அன்பு, குடும்பம், கலாச்சாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக பெண்கள் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்கிறார்கள். பல விஷயங்களை நாம் விட்டுக்கொடுத்து கொண்ட இருக்கிறோம். அப்படி நாம் விட்டுக்கொடுப்பது நாம் அடுத்த தலைமுறை பெண்களுக்கு செய்யும் துரோகம், பெண்கள் தெளிவோடு நம் இலக்குகளுக்காக போராட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
போலீசில் சிக்கிய நடிகை ஜூலி.. மெரினாவில் திமுகவுக்கு ஆதரவு - தவெகவிற்கு எதிர்ப்பு பிரசாரத்தால் வந்த சிக்கல் -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா












Click it and Unblock the Notifications