ஹய் ஹய்யா.. அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை.. அதுவும் ஒரே வாரத்தில்.. அதுவும் வரிசையாக.. வாவ்
சென்னை: அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வரப்போகிறது.. இதனால், மாணவர்களும், அரசு ஊழியர்களும் செம குஷியில் காணப்படுகின்றனர்.
கடந்த 7ம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை மகாவீர் ஜெயந்தி தினம் கொண்டாடப்பட்டது.. இதனால் அன்றைய தினம் அரசு பொதுவிடுமுறை விடப்பட்டிருந்தது.

மறுநாளே, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் வழக்கமான விடுமுறை என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தது... இதனால் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த 3 நாட்களுமே சட்டசபையும் நடத்தப்படவில்லை..
லீவு நாட்கள்: விடுமுறை தினங்கள் முடிந்தே, அனைத்து நிறுவனங்களும் வழக்கம்போல் இயங்கின.. இப்போது மறுபடியும் 3 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை கிடைத்துள்ளது.. வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினம் மற்றும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் ஆகும்.. இந்த நாள் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ விடுமுறை லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது... அதன்படியே, இந்த வருடமும் அரசு விடுமுறை கிடைக்கிறது.. மறுநாள், வரும் சனி, ஞாயிறு 2 நாட்களுமே வழக்கமான விடுமுறை நாள் ஆகும்..
எனவே, இப்போதும் 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. இது அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைவருக்கு ஹேப்பி செய்தியாக உள்ளது.. ஆனால்,சில தனியார் பள்ளிகள் வரும் வெள்ளிக்கிழமையும் தேர்வு நடத்த உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது.. எனவே, அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதால் வரும், திங்களன்று மாற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12ம் வகுப்பு தேர்வு முடிந்துவிட்டாலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருக்கிறது..
அடுத்தடுத்த விடுமுறைகள்: அதனால்தான், வரும் 28ம் தேதிக்குள் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவை பிறப்பித்துள்ளது... எப்படியும் வரும் 28ம் தேதிக்கு பிறகு கோடை விடுமுறை விடப்படும் என்று நம்பப்படுகிறது. தற்போது 3 நாட்கள் தொடர் லீவு வரப்போவதால், அதற்கேற்றவாறு பொதுமக்கள் தங்கள் திட்டங்களை வகுத்து வருகிறார்கள்..
ஆனால், தொற்று பாதிப்பு அதிகமாக பரவிவரவும், இந்த திட்டங்கள் எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை.. அதுவும் சென்னையில் நிறைய கொரோனா கேஸ்கள் பதிவாகிகொண்டிருக்கின்றன.. மறுபடியும் லாக்டவுன் வந்துவிடுமோ? என்ற அச்சமும் சூழ்ந்துள்ளது.. எனினும், கோடை காலம் துவங்கிவிட்டதால், சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்..
மலை மாவட்டம்: குறிப்பாக நீலகிரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.. விடுமுறை நாட்களை தவிர்த்த, மற்ற நாட்களிலும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.. இதனால் நீலகிரியே களைகட்டி காணப்படுகிறது.. விரைவில் 3 நாட்கள் லீவு என்பதால், மலைமாவட்டத்தை நோக்கி பொதுமக்கள் பயணிப்பார்கள் என்று தெரிகிறது.. 10ம் வகுப்பு தேர்வும் முடிந்துவிட்டால், சுற்றுலா பயணிகள் இன்னும் அதிகமாக ஊட்டிக்கு படையெடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications