Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி.. ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஜாக்டோ - ஜியோ' வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற, ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பினை தற்போதைய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2016, 2017, 2019ம் ஆண்டுகளில், வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது..

Government Employees jakto geo Teachers

அரசு ஊழியர்கள்

இதில், பங்கேற்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டது... பல பேர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். பல்வேறு குற்றவியல் வழக்குகளும் இவர்கள் மீது பதியப்பட்டன. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ தங்களது 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு கட்டங்களில் தொடர் போராட்டங்களை நடத்தியிருந்தனர்..

அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும், அரசினால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும் என்றும் அறிவித்தார்.

ஸ்டாலின் தந்த உறுதி

இதையடுத்து, திமுக ஆட்சி அமைந்ததுமே ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவும், பணியிட மாற்றம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், இப்போது வரை சில ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன. இதனால், பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை பெறுவதில், அவர்களுக்கு சிக்கல்களும் ஏற்பட்டன.

இப்படிப்பட்ட சூழலில்தான், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் பள்ளிக் கல்வியின் பல்வேறு துறை இயக்குநர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஜாக்டோ ஜியோ

"தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போதுவரை முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டு நிலுவை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு இணங்க 2016, 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்ட (10.02.2016 முதல் 19.02.2016 வரை, 22.8.2017 அடையாள வேலை நிறுத்தம்), 7.9.2017 முதல் 15.09.2017 வரை; 22.1.2019 முதல் 30.01.2019 வரை பணிக்காலங்களாக முறைப்படுத்தப்படுகிறது. வேலை நிறுத்தப் போராட்டங்களுடன் தொடர்புடைய தற்காலிகப் பணி நீக்கக்காலமும், பணிக்காலமாக முறைப்படுத்தப்படுகிறது.

வேலை நிறுத்த போராட்டங்கள்

அந்த வேலை நிறுத்தப் போராட்டங்களின் காரணமாக அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன. அந்த ஒழுங்கு நடவடிக்கைகளின் காரணமாக, பதவி உயர்வு பெறுவதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதனைச் சரிசெய்யச் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

போராட்டத்தின்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில், பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வின் போது அவர்களுக்கான உரிய முன்னுரிமையினை வழங்க, பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம் காரணமாக, ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+