நிலத்தை வைத்துள்ளவர்களுக்கு ஹேப்பி.. வீட்டுமனைக்கு பட்டா, கிரையப்பத்திரம் வாங்கியாச்சா? லட்டு சான்ஸ்
சென்னை: தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மேலும் வீட்டு வசதி வாரியத்திடமிருந்து வாங்கிய சொத்திற்கு பட்டா பெற சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, ஏழை, எளிய மக்கள் பல்வேறு இடங்களில் புறம்போக்கு மற்றும் அரசு நிலங்களில் பல வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள்.. ஆனால், இவர்களுக்கெல்லாம் அந்தந்த பகுதிகளில் முறைப்படி பட்டா கிடைக்கவில்லை.

அமுதா ஐஏஎஸ் அதிரடி
இதற்கு பிறகுதான், தமிழக அமைச்சரவையில், பேசியிருந்த முதல்வர் ஸ்டாலின், 86000 பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தார். அதற்கேற்றார்போல், வருவாய் துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் கூட்டமொன்றில் பேசியபோது, "சென்னையில் 60000 க்கும் மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 86,368 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன" என்று தகவல் கூறியிருந்தார்.
இதையடுத்து, சென்னை, பிற மாவட்டங்களில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி ஒதுக்கீடு செய்து வருவதுடன், ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் முழுத்தொகையையும் செலுத்தியதும், அவர்களுக்கு விற்பனை பத்திரமும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காகவே வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டா பெறுவதற்கு ஏதுவாக, வருவாய் துறையுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிறப்பு முகாம்கள் அறிவிப்பு
இந்த முகாம்களில், விற்பனை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சிறப்பு முகாம்களில் ஒப்படைத்து, பட்டா பெற்றுக் கொள்ளுமாறு அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கடந்த வாரம்கூட சென்னையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்காக 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் அதாவது 24ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன..
வீட்டுமனைதாரர்கள்
கடந்த 24ம் தேதி மாதவரம், ஆர்.கே. நகர், திருவிக நகர், கிண்டி, மயிலாப்பூர், தி.நகர் பகுதிகளிலும், 25ம் தேதி மாதவரம், பெரம்பூர், திரு.வி.க நகர்- வ.உ.சி நகர், எழும்பூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் திட்டப்பகுதிகளிலும், 26ம் தேதி மாதவரம், எழும்பூர், அம்பத்தூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் திட்டப்பகுதிகளில், 27ம் தேதி மாதவரம், ஆர்.கே.நகர், அண்ணா நகர், எழும்பூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் திட்டம் பகுதிகளிலும், 28ம் தேதி மாதவரம், பெரம்பூர், அண்ணாநகர், மயிலாப்பூர், தி.நகர், சைதை திட்டப் பகுதிகளில் சிறப்பாக முகாம்கள் நடைபெற்று முடிந்தன.
இந்நிலையில், வரும் 8ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதால், இதில் தவறாமல் வீட்டுமனை தாரர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ளதாவது:
கிரையப்பத்திரம், பட்டா
"தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள சென்னை பெருநகர வளர்ச்சித்திட்டம் (MUDP) மற்றும் தமிழ்நாடு புறநகர வளர்ச்சித்திட்டத்தில் (TNUDP) மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்று கிரையப்பத்திரம் பெறுவதற்காகவும் மற்றும் கிரையப்பத்திரம் பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் பட்டா பெறுவதற்காகவும்,
வருவாய்த்துறையுடன் இணைந்து 01.03.2025 முதல் 08.03.2025 வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் தவறாது கலந்துக்கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகாம் நடைபெறும் நாள் மற்றும் திட்டப்பகுதிகளின் https://tnuhdb.tn.gov.in இணையதள முகவரியில் காணலாம்" எனவும் கூறப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications