"CM ஐயா.. உண்மையிலே நீங்க தெய்வம்தான்யா".. ஸ்டாலினிடம் போனில் கதறி அழுத தான்யாவின் தாய்.. நெகிழ்ச்சி

சிறுமி தான்யாவின் பெற்றோர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கண்டிப்பா தெய்வம்தான்யா நீங்க உண்மையிலேயே.. உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது" என்று கதறி அழுது முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி உள்ளார் ஆவடி சிறுமி தான்யாவின் தாயார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த வீராபுரத்தை சேர்ந்த ஸ்டிபன்ராஜ்- சௌபாக்கியா தம்பதி.. இவர்களின் 9 வயது மகள் தான்யா. அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள் சிறுமி தானியா.

பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் பாதிப்பு குறையவில்லை.. மாறாக, தானியாவின் முகம், வலது கண், கன்னம், தாடை, உதடு என்று ஒரு பக்கம் முழுவதுமே மெல்ல மெல்ல சிதைய தொடங்கியது.

 ஸ்டாலின் அட்வைஸ்

ஸ்டாலின் அட்வைஸ்

இதற்கு பிறகு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவர்கள் சிறுமி தானியாவுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்... இதையடுத்து, தான்யாவுக்கு சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் ஸ்டாலினும் அதிரடியாக உத்தரவிட்டார்... பின்னர், சவீதா மருத்துவமனையில் தானியா அனுமதிக்கப்பட்டு, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையும் நடந்தது.. ஜெர்மன் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் 2 பேர் அடங்கிய 10 பேர் கொண்ட மருத்துவ குழுவானது, இந்த ஆபரேஷனை மேற்கொண்டது. மொத்தம் 8 மணி நேரம் இந்த ஆபரேஷன் நடந்துள்ளது.

 ஆபரேஷன் சக்ஸஸ்

ஆபரேஷன் சக்ஸஸ்

இறுதியில் ஆபரேஷன் சக்ஸஸ் ஆனது.. இதையடுத்து, சிறுமியின் அம்மாவிடம், முதல்வர் ஸ்டாலின் போன் மூலம் பேசினார்.. அப்போது, சிறுமியின் தாய், கண்ணீருடன் முதல்வருக்கு தன்னுடைய நன்றியை கூறினார்.. இதற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் தாயார் சௌபாக்கியா சொன்னதாவது: "நீங்க பயப்படாதீங்க. தானியா நல்லபடியாக வந்துவிட்டாள். தானியாவை பார்க்க நான் கண்டிப்பாக வருவேன் என்று முதல்வர் சொன்னார். அவர் இப்படி சொன்னது, எனக்கு கனவு மாதிரி இருக்கிறது.. என்னுடைய குழந்தையை உடனே பார்த்து இந்த அளவுக்கு ஆபரேஷனை செய்து முடித்துவிட்டார்கள்...

 சிஎம் சார் நன்றி

சிஎம் சார் நன்றி

நான் ஆறரை வருஷமாக, எத்தனையோ கோயில், குளத்துக்கெல்லாம் போனேன்... யார் எங்கு போகச் சொன்னாலும் உடனே போவேன்.. என்னுடைய மகனை வயிற்றில் வைத்திருந்தபோதுகூட, தான்யா சிகிச்சைக்காக போனேன்... முதல்வர் என்னுடைய குழந்தையை சரி பண்ணியிருக்கிறார்... ரொம்ப ரொம்ப நன்றி சிஎம் சார்.. முதல்வருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது" என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

 ஸ்டாலின் கடவுள்

ஸ்டாலின் கடவுள்

தான்யாவின் அப்பா ஸ்டீபன்ராஜ் சொல்லும்போது, "நான் எத்தனையோ கடவுளை வேண்டி இருக்கிறேன், ஆனால், எந்த கடவுளும் எதுவும் செய்யவில்லை. எனக்கு முதல்வர் ஸ்டாலின் தான் கடவுள்" என்று உணர்ச்சிபொங்க கூறினார். தான்யா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதிலிருந்து கடந்த 6 நாட்களாகவே அமைச்சர் நாசர் சிறுமியை தினமும் வந்து பார்த்து சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து குழந்தைக்கு ஆறுதல் தெரிவித்து வந்ததையும் இந்த தம்பதி நினைவுகூர்கிறார்கள்..

 CM சார்.. தெய்வம்

CM சார்.. தெய்வம்

முதல்வரிடம் சிறுமியின் தாய் பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. "உங்களால் மட்டும்தான்யா என் பொண்ணு இன்னைக்கு ரொம்ப சந்தோஷமாகவும், பயமில்லாமலும் இருக்கிறது உங்களால் மட்டும்தான்யா.. கண்டிப்பா நீங்க தெய்வம்தான்யா நீங்க உண்மையிலேயே..." என்று கதறி அழுது நன்றி சொன்ன வீடியோ அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்து வருகிறது. "உன்னைப் பார்த்துவிட்டு நல்ல நிகழ்ச்சிக்கு போக முடியுமா" என்று பள்ளியிலும், தான் வசிக்கும் தெருவிலும் புறக்கணிக்கப்பட்ட 9 வயது தான்யா, முன்பைவிட கூடுதல் நம்பிக்கையுடனும், புத்தம் புதிய முகத்துடன், மீண்டும் வரபோகிறாள்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+