Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இட்லி மாவு பாக்கெட் போட ரேஷன் அரிசி.. சாந்தி வீட்டுக்குள் சட்டென ஆபீசர்ஸ்.. மகிழ்ச்சியில் கடலூர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அரிசியை கடத்தினால், அவர்களது குடும்ப அட்டை பறிமுதல் செய்யப்படும்" என்று பலமுறை போலீஸ் தரப்பில் வார்னிங் தரப்பட்டுள்ளது.. அப்படியிருந்தும் கடத்தல்கள் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன.. எனவேதான் தமிழக எல்லைகளில் இதற்கெனவே காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடலூர் சம்பவம் அதிர்ச்சியை தந்து வருகிறது.. கடலூரில் சாந்தி என்பவர் யார்? சாந்தி வீட்டுக்குள் அதிகாரிகள் ஏன் நுழைந்தார்கள்?

தமிழகத்தில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப்பொருட்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், ரேஷன் அரிசி கடத்தல்கள் குறையவில்லை..

ration cuddalore Idly Batter


கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி

ரேஷன் கடையில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை கேரளா, ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநிலங்களுக்கு கடத்தி செல்வது தொடர்கதையாகி வருகிறது. இந்த கடத்தல் பொருட்களை விற்பதற்கென்று புரோக்கர்கள் சிலர் உள்ளனர். இதற்கு தனி கமிஷன்கள் உண்டு.. ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கும் அண்டை மாநிலத்தவர்கள், அதையே பாலிஷ் செய்து, அதிக விலைக்கு நம்மிடமே விற்றுவிடுகிறார்கள்.

பதுக்கல் ரேஷன் பொருட்கள்

அல்லது ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக வாங்கி, இட்லி மாவு அரைத்து பாக்கெட்டுகளில் விற்பனை செய்கிறார்கள்.. பெரும்பாலானோர் வேன் வைத்து, அரிசி மில்களுக்கு, ரேஷன் அரிசியை கடத்தி கொண்டுபோகிறார்கள்.. இதுபோன்ற கடத்தல்களால் ரேஷன்தாரர்களுக்கு முறையான அரிசி, பருப்புகள் கிடைப்பதில்லை. எனவே, அரிசி கடத்தலை ஒழிக்கும் முயற்சியில், தமிழக தீவிர வேட்டையை எல்லைகளில் நடத்தி வருவதுடன், கடத்தல் அரிசியை கைப்பற்றி வருகிறார்கள்.

கடந்த 2024ம் வருடத்தில் சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான கடத்தல் ரேஷன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 11571 கடத்தல் நபர்கள் கைது செய்யப்பட்டு, 2012 கடத்தல் வாகனங்கள் பறிமுதல் செய்திருந்தனர். தற்போதும் ரேஷன் பொருட்கள் கடத்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், கடலூர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது..

பண்ருட்டியைச் சேர்ந்த எல்.என்.புரம் பகுதியில் சட்டவிரோதமாக அதிக அளவில் ரேஷன் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக, கடலூர் வருவாய்த்துறை பறக்கும் படை குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை குழுவினர் எல்.என்.புரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

சாந்தி வீட்டுக்குள் அதிகாரிகள்

அப்போது சாந்தி என்பவர், தன்னுடைய வீட்டில் ரேஷன் பொருட்கள் பதுக்கி வைத்து விற்று வருவது அம்பலமானது. இதையடுத்து, உடனடியாக சாந்தி வீட்டுக்குள் அதிகாரிகள் நுழைந்தனர்.. அங்கே 1200 கிலோ ரேஷன் அரிசி, 9 கேஸ் சிலிண்டர், 70 லிட்டர் மண்ணெண்ணெய், 170 கிலோ துவரம் பருப்பு, 25 கிலோ கோதுமை மற்றும் அரசு முத்திரை கொண்ட காலி சாக்குகள் என பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு குட்டி ரேஷன் கடையே சாந்தி வீட்டுக்குள் இருந்தது. திடீரென அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்ததுமே, சாந்தி கெஞ்ச ஆரம்பித்தார்.. சார் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதீங்க, எவ்வளவு பணம் கேட்டாலும் தந்துடறேன்" என்று மன்றாடியிருக்கிறார்கள். ஆனால், அதிகாரிகளோ, அனைத்து ரேஷன் பொருட்களையும் பறிமுதல் செய்து, சாந்தியையும் கைது செய்தனர்.
சாந்தி வீட்டில் எப்படி

இந்த ரேஷன் பொருட்களை சாந்தி மட்டுமே விற்பனை செய்து வந்தாரா? யாருக்கெல்லாம் விற்றார்? வேறு எங்காவது பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதா? சாந்திக்கு எப்படி இவ்வளவு ரேஷன் பொருட்கள் கிடைத்தன? என்றெல்லாம் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே, எல்.என்.புரத்திலுள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படுவதில்லை என்று புகார்கள் வெடித்து வந்தன.. இப்போது சாந்தி வீட்டில் , மூட்டை மூட்டையாக உள்ள உள்ள ரேஷன் பொருட்களை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. எனினும், இப்போதாவது சாந்தியை கைது செய்து, ரேஷன் பொருட்களை பறிமுதல் செய்தது மாவட்ட மக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+