ரேஷனில் இந்த பொருளும் இனி ஈஸியா பெறலாம்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி.. மத்திய அரசு குட்நியூஸ்
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு நம்பிக்கை தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. கோதுமையில் ஆங்காங்கே தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில், அந்த குறையை அரசு போக்கியிருக்கிறது. இது சம்பந்தமான அறிவிப்பு, ரேஷன்தாரர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
மத்திய அரசை பொறுத்தவரை, தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை, 1,038 டன்னாக கடந்த ஆண்டு குறைத்திருந்தது. இதனால் கார்டுதாரர்களுக்கு, ஒரு கிலோ - 2 கிலோ என, இருப்பை பொறுத்தும், முதலில் வருவோருக்கும் கோதுமை வழங்கப்பட்டது. பலர் கோதுமை கிடைக்காமல், ஏமாற்றமும் அடைந்தனர்.

கோதுமை தட்டுப்பாடு: எனவே "தமிழகத்திற்கு வழக்கம் போல கோதுமையை வழங்க வேண்டும்" என்று தமிழக உணவுத் துறை சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.. அத்துடன் தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்று, மத்திய அமைச்சர்களையும் இதுசம்பந்தமாக சந்தித்து பேசினார்கள்..
அதுமட்டுமல்லாமல், தமிழகத்திற்கான கோதுமையை உயர்த்தி வழங்குமாறு, மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன், உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, செயலர் ராதாகிருஷ்ணன், உணவு வழங்கல் துறை இயக்குனர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள், மத்திய உணவு துறை அதிகாரிகளையும் தொடர்ந்து சந்தித்து வலியுறுத்தி கொண்டேயிருந்தனர்.
பண்டிகை காலம்: இதையடுத்து, தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை, மாதம் 8,500 டன்னில் இருந்து, 17,100 டன்னாக அதிகரித்து, மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்ததுடன், இந்த மாதமே வழங்கப்படும் என்றும் உறுதி தெரிவித்திருந்தது.. இதனால், பண்டிகை காலம் என்பதால், அரிசி அட்டைதாரர்களுக்கு கோதுமையை பெறுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்றே நம்பப்பட்டது.
இந்நிலையில், தமிழக ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அரிசிக்கு பதில் கோதுமையை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில், கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோவும், மற்ற இடங்களில், 2 கிலோ வரையும் கோதுமை வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பானது ரேஷன்தாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
அமைச்சர் விளக்கம்: இதனிடையே, ரேஷன் கார்டுகளுக்கு தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், புதிய விளக்கம் ஒன்றை அறிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:
"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்காகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications