Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பச்சை கொடி"யோடு ஜவாஹிருல்லா.. திமுகன்னு சொன்னதுமே, அதைவிடுங்க.. கேட்டாரு பாருங்க ஒரு "டிமாண்டு".. பலே

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1 சீட்டும் தரவில்லை - கூட்டணியிலும் இல்லை.. ஆனாலும், யாருக்கு ஆதரவு தருவது? எப்படி தருவது? என்ற குழப்பத்தில் இருந்த மனித நேய மக்கள் கட்சி, தற்போது தெளிவான ஒரு முடிவை ஆலோசித்து எடுத்துள்ளது. என்ன அது?

இந்த முறை எப்படியாவது, திமுக கூட்டணியில் இடம் பிடித்துவிடுவது என்பதில் மனித நேய மக்கள் கட்சி முனைப்பு காட்டியது.. எனவே, போட்டியிடுவதற்காக ஒரு தொகுதியை கேட்டிருந்தது.. அத்துடன், 40 தொகுதிகளில் எந்த தொகுதியை கொடுத்தாலும் போட்டியிடுவோம் என்றும் அறிவித்திருந்தது.

Glad news from MMK and Big support to DMK Alliance in the MP Election says Professor jawahirullah

1 சீட் வேண்டும்: இதையடுத்து, திமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இடையேயான 2வது சுற்றுப் பேச்சுவார்த்தையும் அறிவாலயத்தில் மூத்த தலைவர் டி.ஆர் பாலு தலைமையில் நடைபெற்றது. ஆனால், 1 சீட் கூட தராமல், கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால், கடும் அதிருப்திக்கு ஆளாகிவிட்டது மனித நேய மக்கள் கட்சி..

திமுகவை விமர்சித்துவிட்டு, இப்போது வந்த கமலுக்கு கூட சீட் தந்து ஒப்பந்தம் போட்டிருக்காங்க. இத்தனை வருஷமாக, திமுகவின் வெற்றிக்காக உழைத்தும் பலனில்லையே என்று ஆதங்க குரல்கள் மமநீ நிர்வாகிகளிடம் வெடித்ததாகவும், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிவிடுவோம் அல்லது விசிக, கம்யூனிஸ்ட்களுக்கு மட்டும் தோழமை அடிப்படையில் தேர்தல் பணிகளை செய்வோம் என்றெல்லாம் பல்வேறு அதிருப்திகள் வெடித்துள்ளன.

அடுத்தது என்ன: இதற்கு பிறகுதான், நேற்றைய தினம் செயற்குழு கூட்டம் திருச்சியில் கூட்டப்பட்டு, அடுத்து என்ன செய்வது என்று விவாதிக்கப்பட்டுள்ளது..

ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் 500 பேர் பங்கேற்றிருந்தனர்.. வரப்போகும் தேர்தல் தொடர்பாக ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் நடத்தப்பட்டதுடன், நிர்வாகிகளிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன.

ஜவாஹிருல்லா: இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, "பாஜகவின் மதவாத செயல் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக இந்த தேர்தலை கருவியாக சூழ்ச்சியோடு பயன்படுத்தி வருகிறது. இந்த அபாயத்திலிருந்து நாட்டை மீட்பதற்காக இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

எனவே, நாட்டை பாசிச அபாயத்திலிருந்து மீட்டு தமிழகம், புதுவையில் திமுக தலைமையிலான அணியை ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளோம். வருகிற 2025ம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து நிரப்பப்படும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஒரு தொகுதி மமகவுக்கு கட்டாயமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செயற்குழு கூட்டம்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுப்பது என்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. இன்று நடைபெற்ற செயற்குழுவில் எந்தவித குற்றச்சாட்டும் நிர்வாகிகள் தெரிவிக்கவில்லை. நாங்கள் எந்தவித முடியும் தன்னிச்சையாக எடுக்கவில்லை.

இந்தியா கூட்டணி தற்போது பலமாக உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பாக நீங்கள் கேட்டிருந்தால் தயக்கமாக இருந்திருக்கும். இப்போது இந்தியா கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தோல்வி பயம் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் வந்துள்ளது. அதனால், அவசர அவசரமாக விதிமுறைகளை வகுத்து சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்" என்றார் ஜவாஹிருல்லா.

தோழமை கட்சிகள்: இதையடுத்து திமுக கூட்டணிக்கான முழு ஆதரவை மனிதநேய மக்கள் கட்சி தந்துள்ளதுடன், தேர்தல் பணிகளிலும் தோழமை கட்சிகளின் வெற்றிக்காக களமிறங்கும் என தெரிகிறது. இருந்தாலும், அந்த 2025-ன் மாநிலங்களவை 1 சீட் பற்றி திமுக மேலிடம் என்ன முடிவெடுக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+