“ஞானசேகரன் செல்போன் Flight Modeல் இருந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது”: அரசு தரப்பு வழக்கறிஞர்
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டபோது, ஞானசேகரன் செல்ஃபோன் ஃபிளைட் மோடில் இருந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்குரைஞர் மேரி ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு, 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து பிப்ரவரி மாதம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
பின்னர் அந்த குற்றப் பத்திரிக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். இந்த வழக்கில், 29 அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அனைத்து விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, கடந்த மே 28 ஆம் தேதி, ஞானசேகரனுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி ராஜலட்சுமி, ஜூன் 2 ஆம் தேதி தண்டனை விவரங்கள் தெரிவிக்கப்படும் என அற்வித்திருந்தார்.
ஆயுள் தண்டனை
அதன்படி, ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்களை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி இன்று அறிவித்தார். இதற்காக புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்ட அவருக்கான தண்டனை விவரங்களை நீதிபதி அறிவித்தார்.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் ஒன்பது பிரிவுகளில், ஒரு மாதம் முதல் 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனையும், தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் அறிவித்த நீதிபதி, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் எந்த தண்டனையும் அறிவிக்கவில்லை. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளதால், அதிகபட்ச தண்டனையான 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனையை ஞானசேகரன் அனுபவிக்க வேண்டும்.
ஞானசேகரன் - அபராதம் + தண்டனை
அதேபோல பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடாக வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி ராஜலட்சுமி, உரிய விசாரணைக்கு பிறகு, தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதி திட்டத்தின் கீழ், போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆய்வுக் குழுவுக்கு உத்தரவிட்டு, அதற்காக இந்த தீர்ப்பு நகலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
11 குற்றச்சாட்டுகளும் நிரூபணம்
இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயந்தி மேரி, "ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் ஆவணப்பூர்வமாக, அறிவியல் பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன. இனி யார் அந்த சார்? என்று கேள்வி எழுப்பினால் அது நீதிமன்ற அவமதிப்பு. ஞானசேகரனின் பின்புலத்தில் யாரும் இல்லை. இந்த வழக்கில் அவரது செல்போன் மிக முக்கிய சாட்சி.
செல்போன் மிக முக்கிய சாட்சி
ஞானசேகரன் செல்போனுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவியும் உறுதி செய்திருந்தார். ஆதாரப்பூர்வமாகவும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. மாணவியை மிரட்டுவதற்காகவே, அவர் தானும் அந்த பல்கலைக்கழக ஊழியர் என்று, ஞானசேகரன் யாருடனோ போனில் பேசியது போல நடித்துள்ளார்.
ஞானசேகரன் போன் ஃப்ளைட் மோட்
குற்றத்தின் போது ஞானசேகரனின் செல்போன் ஃப்ளைட் மோடில் (Flight Mode) இருந்ததற்கான ஆதாரங்களை, ஏர்டெல் நிறுவன தொழில்நுட்ப நிபுணர் வாக்குமூலமாக அளித்துள்ளார். இந்த வழக்கில் வேறொரு நபர் என யாரும் இல்லை. அப்படி பேசினால் அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும். சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications