தங்கம், வெள்ளி விலையில் தடாலடி உயர்வு.. அப்போ சென்னை மார்கெட்டில் 'தீபாவளி பரிசு' உண்டு!
சென்னை: உலகப் பொருளாதாரத்தில் முக்கிய திருப்பமாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 15 நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை டக்கென உயர்ந்துள்ளது. ஏப்ரல் 10 அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும் பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் மீதும் ஈரான் தாக்குதலை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதற்கு மத்தியில் பங்குச்சந்தை, தங்கம் - வெள்ளி, பிட்காயின் என அனைத்தும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.

தங்கம் விலை
சர்வதேச சந்தையான காமெக்ஸில் தங்கம் பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் (COMEX gold futures) ஒரு அவுன்ஸுக்கு 4,846 டாலருக்கு மேல் வர்த்தகமாகி, 3.46 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது. இதேபோல் தங்கத்தின் ஸ்பாட் சந்தை விலை இன்று ஆசிய சந்தை வர்த்தகம் துவங்கியதில் இருந்து 97.73 டாலர் அதிகரித்து 4,803.58 டாலராக என்ற 2.08 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த உயர்வு மூலம் முதலீட்டாளர்களிடையே மீண்டும் தங்கத்திற்கான முக்கியதுவம் கிடைத்துள்ளதை காட்டுகிறது. பத்திர முதலீட்டில் இருந்து வெளியேறிய முதலீடுகள் தற்போது தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துக்களுக்கு மாறி வருகிறது. ஸ்பாட் சந்தையில் தங்கம் விலை 4,856.00 டாலர் வரையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் இன்று உயர்வுடன் உள்ளது, வெள்ளி பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் 6.60 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸுக்கு 76 டாலரை தாண்டியுள்ளது. வெள்ளியின் ஸ்பாட் விலையான 3.3720 டாலர் அதிகரித்து 76.3605 டாலராக உள்ளது. இதன் மூலம் தற்போது 4.62 சதவீதம் உயர்வு பதிவு செய்துள்ளது. போர் நிறுத்தம், கச்சா எண்ணெய் சப்ளை தொடரும் வேளையில் தொழில்துறை தேவை அதிகமாகும் காரணத்தால் வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
பங்குச் சந்தையும் உயர்ந்தது
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வுக்கு இணையாக, உலக பங்குச் சந்தைகளும் சிறப்பான உயர்வை கண்டுள்ளன. ஆசிய பங்குச் சந்தைகள் 5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளன. ஜாப்பான் நிக்கி 5.29 சதவீதமும், ஹாங்காங் 2.76 சதவீதமும், இந்தோனேசியா 2.86 சதவீதமும் உயர்ந்துள்ளது.
இந்த ஒருங்கிணைந்த உயர்வு, மத்திய கிழக்கு பதற்றம் சற்று தணிந்துள்ளதால் ஏற்பட்ட நம்பிக்கை திரும்பியதை கண்ணாடி போல் சந்தையில் பிரதிபலிக்கிறது.
போர் நிறுத்த அறிவிப்பின் முக்கியத்துவம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள இந்த 15 நாள் போர் நிறுத்தம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நோக்கிய முதல் முக்கிய அடியாகப் பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 10 அன்று பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனைகளை தீர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வரும் வரை சந்தைகள் பெரும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு?
தங்கம் விலை உயர்வு இந்தியாவில் தங்க நகை வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை அதிகரித்தால், நகை வாங்குவோருக்கு செலவு உயரும். அதே நேரத்தில், தங்கத்தில் ஏற்கனவே முதலீடு செய்தவர்களுக்கு இந்த உயர்வு லாபத்தைத் தரும். வெள்ளியும் தொழில்துறையில் பயன்படுவதால், சில பொருட்களின் விலையும் பாதிக்கப்படலாம்.
அடுத்து என்ன நடக்கும்?
ஏப்ரல் 10 அன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் முடிவு தான் சந்தையின் அடுத்த போக்கை தீர்மானிக்கும். போர் நிறுத்தம் வெற்றிகரமாகத் தொடர்ந்தால், தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலையான அளவில் உயரலாம். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அல்லது பதற்றம் மீண்டும் அதிகரித்தால், விலைகள் மீண்டும் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும்.
-
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
இஸ்லாமாபாத்தில் கைகுலுக்கும் அமெரிக்கா - ஈரான்? திடீர் ஹீரோவான பாகிஸ்தான்! -
முடிவுக்கு வந்த போர்.. "ஈரான் மீதான தாக்குதல் 2 வாரங்களுக்கு நிறுத்தம்.." அதிபர் டிரம்ப் அறிவிப்பு -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஏற்க மறுத்த ஈரான்.. அடுத்து என்ன நடக்கும்? 3 விஷயங்களுக்கு சான்ஸ் -
Iran-US war LIVE: ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்- ஈரான் அறிவிப்பு -
வெளிநாட்டில் இருந்து மூட்டை மூட்டையாக.. தங்கத்தை இறக்குமதி செய்யும் இந்தியர்கள்.. ஏன்? பின்னணி -
உலக தங்க வரலாற்றில் இப்படி நடந்தது இல்லை! தங்கத்தை அள்ளிக்குவிக்கும் சீனா.. பின்னணியில் பக்கா பிளான் -
ஈரானில் உள்ள இந்தியர்களே உஷார்! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இதை செய்யாதீங்க! -
8 மணி கெடு! ஈரான் கையில் தான் எல்லாமே.. கடைசி நேரத்தில் கைவிரித்த ஜேடி வேன்ஸ்.. டிரம்ப் ஆட்டம்! -
இதுதான் எங்க கண்டிஷன்.. டிரம்ப்-க்கு செக் வைத்த ஈரான்.. போரில் புதிய திருப்பம்! -
டிரம்ப் நிர்வாகத்தில் கருப்பு ஆடு.. விமானி குறித்த விஷயத்தை லீக் செய்த நபருக்கு பகிரங்க வார்னிங்












Click it and Unblock the Notifications