ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்!

Subscribe to Oneindia Tamil

இஸ்ரேல் சார்ந்த பிரபல ட்விட்டர் கணக்கான MOSSADil, அமெரிக்கா - ஈரான் இடையேயான புதிய அமைதி ஒப்பந்தம் குறித்து முழுமையான ஆய்வு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இது முழுமையான ஒப்பந்தம் அல்ல, வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மட்டுமே என்றும், மேலும் இந்த ஒப்பந்தம் இஸ்ரேல் - ஈரான் இடையிலான அடிப்படை பிரச்சனைகளை இது தீர்க்காது என்றும் அந்தப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த செயல்பாட்டில் எப்படி பாகிஸ்தான் பெரும் பங்கு வகித்ததோ, அதேபோல் போரில் அமெரிக்காவுக்கு உதவியது இஸ்ரேல். ஆனால் அமெரிக்கா போரை முடிக்க திட்டமிட்ட போது இஸ்ரேல் தான் இதற்கு பெரும் தடையாக இருந்தது. இந்த தடையை மீறி தற்போது அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

trump iran war USA Israel MOSSADil US Iran deal Iranian regime wins US Iran deal Trump loses Iran deal MOSSADil analysis Iran US Iran MOU Iran people lose peace deal Israel Iran core issues MOSSADil winners losers Trump Iran agreement failure Iran regime victory MOSSADil MOSSADil MOU MOSSADil

இஸ்ரேலின் நிலைப்பாடு

அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் மற்ற நாடுகள் ஒப்புக்கொண்டாலும், இஸ்ரேல் இதில் இணைந்து கையெழுத்திடவில்லை. மேலும், இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் இஸ்ரேல் இடம்பெறவில்லை.

இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடு, தனது தேசிய நலன்களுக்கு ஏற்ப செயல்படும் உரிமையும் கடமையும் தனக்கு உள்ளது என்று இஸ்ரேல் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் இஸ்ரேல் - ஈரான் இடையிலான அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காது என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

ஈரான் ஆட்சிக்கு பெரிய வெற்றி

இந்த அமைதி ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் மிகப்பெரிய வெற்றியாளராக உருவெடுத்துள்ளது. ஈரான் தான் இந்த போரை தொடங்கியது, உலகளாவிய கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தியது, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் தனது மக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தது.

ஆனால், இந்த ஒப்பந்தம் அவர்களுக்கு பெரும் ஆதரவாகவும், வெற்றியாகவும் அமைந்துள்ளது. உலக நாடுகளின் கவனத்தையும், வெறுப்பையும், இஸ்ரேலுக்கு எதிராக திருப்பியது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் கவனத்தை இஸ்ரேலின் பாதுகாப்பிலிருந்து ஈரான் ஆட்சியை காப்பாற்றுவதற்காகவும் பாதுகாப்பதற்கு மாற்றியுள்ளது என MOSSADil கணக்கில் செய்யப்பட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரான் மக்களுக்கு பெரிய தோல்வி

இந்த ஒப்பந்தத்தில் ஈரான் மக்கள் தான் மிகப்பெரிய தோல்வியாளர்களாக உள்ளனர். அவர்களுக்கு சுதந்திரம் வரும் என்று உறுதியளிக்கப்பட்டது. வெளிநாட்டு உதவி வரும் என்று நம்பிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால், மீண்டும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் ஈரான் ஆட்சியை வலுப்படுத்தும் அதே வேளையில், ஈரான் மக்களின் நம்பிக்கையை மீண்டும் உலக நாடுகளால் காப்பாற்றப்பட முடியவில்லை.

டிரம்புக்கு ஏற்பட்ட சவால்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்று வெற்றியாக அமைய வாய்ப்பிருந்தது. ஆனால், இது டிரம்ப்புக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்த ஒப்பந்தம் இஸ்ரேல் - ஈரான் இடையிலான அடிப்படை பிரச்னைகளை தீர்க்காததால், அமெரிக்கா மீண்டும் சிக்கலான நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது.

இஸ்ரேல் தனது தேசிய நலன்களுக்கு ஏற்ப தனியாக செயல்படும் என்று தெரிவித்துள்ளதால், அமெரிக்காவின் முயற்சிகள் மேலும் சிக்கலாக மாறக்கூடும் என தெரிவித்துள்ளது.

இந்த அமைதி ஒப்பந்தம் மத்திய கிழக்கு பகுதியில் நீண்டகால அமைதியை ஏற்படுத்தும் என்று சிலர் நம்பினாலும், இஸ்ரேல் - ஈரான் இடையிலான அடிப்படை மோதல்கள் தொடர்ந்து நீடிக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்கா எவ்வாறு இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான சமநிலையை பராமரிக்கும் என்பது தான் இனி வரும் நாட்களில் முக்கியமான கேள்வியாக உள்ளது.

MOSSADil கணக்கு

MOSSADil என்பது X (ட்விட்டர்) தளத்தில் மிகவும் பிரபலமான இஸ்ரேல் சார்ந்த கணக்குகளில் ஒன்றாகும். இது அரசு சாராமல் இயங்கும் கணக்கு என்றாலும், இஸ்ரேல் தொடர்பான புவிசார் அரசியல், உளவுத்துறை, இராணுவ நடவடிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களில் ஆழமான பகுப்பாய்வுகளை வழங்குவதில் பிரபலமான கணக்காகும்.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்புகள் (Mossad, IDF), ஈரான்-இஸ்ரேல் மோதல், ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற அமைப்புகள் குறித்து அடிக்கடி விரிவான ஆய்வுகளை இப்பகத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறது. மேலும் இந்தக் கணக்கு ஒரு pro-Israel நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் கணக்கு எனவும் பலர் கருதுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+