தங்க நகை சீட்டு போட்டவர்கள் நினைத்தே பார்க்காதது.. கடந்த மாதம் நடந்த மாற்றம் தெரியுமா?
சென்னை: தங்க நகை சீட்டு போடும் பலர் மாதத்தில் எப்போது தங்கம் விலை குறையும் என்பதை அறிந்து தான் நகை சீட்டு கட்டுவார்கள். ஆனால் நகை சீட்டு கட்டுவோருக்கு ட்விஸ்ட் தரும் வகையில் கடந்த மாதம் பெரிய மாற்றம் நடந்துள்ளது. அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு பிரச்சனை காரணமாக, முதலீட்டாளர்கள் பலர், தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினார்கள். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்தது. இதனால் நகை சீட்டு கட்டுவோருக்கு நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு விலை ஏறியுள்ளது.
தங்க நகை சீட்டு என்பது, ஒவ்வொரு ஊரிலும் உள்ள பிரபல நகைக்கடையில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் தங்க நகைகள் வாங்கும் திட்டமாக இருக்கிறது.

இதில் மாதத் தவணையாக அவர்கள் செலுத்தும் தொகையை விட சற்று அதிகமாக நகைக் கடை தரப்பில் ஒரு போனஸ் தொகை சேர்க்கப்படும் அல்லது செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்க நகையை தருவார்கள். அல்லது செய்கூலி சேதாரம் இல்லாமல் வெறும் ஜிஎஸ்டி மட்டும் கட்டி தங்க நகையை வாங்கி கொள்ளலாம் என்று சீட்டு இருக்கும்.
விலை குறையும் போது கட்டுவார்கள்
இந்த தங்க நகை சீட்டு என்பது, ஒவ்வொரு மாதமும் தங்கம் விலை எவ்வளவு இருக்கிறதோ, அந்த தொகைக்கு தங்கமாக வாங்கி டிஜிட்டலில் சேமிக்கும் திட்டம் ஆகும். அதாவது தங்கம் இன்றைக்கு என்ன விலை இருக்கிறதோ, அந்த கிராம் நகை அந்த மாதத்தில் ஏறும். அடுத்த மாதத்தில் தங்க நகை கிராம் என்ன விலை விற்கிறதோ அந்த விலையில், தங்க கிராம்கள் சேரும். மாதம் 30000 வரை கூட சேமித்து தங்கம் நகையை 11 மாதங்கள் கட்டி 11 மாதங்கள் கழித்து நகை எடுக்க முடியும்.
தங்க நகை சீட்டு
ஆனால் தங்க நகை சீட்டு போடுவோர், என்ன விலையில் தங்கம் விற்கிறதோ, அந்த விலையில் தான் தங்கத்தை வாங்க முடியும் என்பதால், தங்கம் விலை குறையும் நாட்களில் சீட்டு பணத்தை கட்டுவார்கள். அப்போது தான் அதிகமான தங்கத்தை சேமிக்க முடியும் என்பது எதார்த்தம். இதுவே தங்கத்தில் சேமிக்க விரும்பும் மக்களுக்கு ஒரு பயனுள்ள வழிமுறையாக இருக்கிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்
ஆனால் எதிர்பாராத விதமாக தங்கம் விலை கடந்த ஓராண்டாக நினைத்தே பார்க்க முடியாத வேகத்தில் ஏறி வருகிறது. கடந்த செப்டம்பரில் இருந்து இந்த செப்டம்பருக்கு சீட்டு போட்டிருந்தால், தங்கம் விலை ஒவ்வொரு மாதமும் அதிகமாகவே இருந்திருக்கும். அதாவது ஒரு மாதம் கூட அவர்கள் நினைத்தபடி குறைவாக தங்க நகை விலை குறைந்திருக்காது. மாறாக தங்க நகை விலை அதிகமாகவே இருந்திருக்கும்.
விலை அதிகரிப்பு ஏன்
ஏனெனில் ரஷ்யா உக்ரைன் போர், பொருளாதார மந்த நிலை, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பொருளாதார கொள்கைள் காரணமாக தங்கம் தான் பாதுகாப்பான முதலீடு என்று கருதி பலரும், தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினார்கள். இதன் விளைவாக தங்கம் விலை தாறுமாறாக ஏறியது. இதுஒருபுறம் எனில், ரூபாயின் மதிப்பு சரிவும் தங்கம் விலை உயர காரணமாக அமைந்தது.
தங்கம் விலை 78000 ரூபாய்
இந்த சிக்கல்கள் ஒரு புறம் எனில், கடந்த மாதம் இதுவரை இல்லாத, புதிய சிக்கலாக அமெரிக்கா இந்தியாவிற்கு 50 சதவீத வரி விதிப்பை நடைமுறைப்படுத்தியது. இது நிலைமையை இன்னும் சிக்கலாக்கிவிட்டது. இதனால் கடந்த 10 நாளில் தங்கம் விலை சட்டென 6 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. தங்கம் 22 கேரட் ஒரு கிராம் 9,725 ரூபாய் ஆக இன்றைக்கு இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் 77,800 ரூபாய் ஆக இருக்கிறது.
தங்கம் விலை அதிகரிப்பு
இப்படி தங்கம் விலை சட்டென உயர்ந்த காரணத்தால் தங்க நகை சீட்டு போட்ட பலர் கவலை அடைந்துள்ளனர். தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதே நிலை நீடித்தால் தங்கம் விலை 80 ஆயிரத்தை கடக்கும் என்ற அச்சம் இருக்கிறது. அதேபோல் ஒரு லட்சம் வரை ஒரு சவரன் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். தங்க நகை சீட்டு போட்ட பலர், எப்படியாவது தங்கத்தை சேமிக்கலாம் என்று நினைத்தே போட்டிருப்பார்கள். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்த மாற்றங்கள் அவர்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.
-
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
கயிறு அவிழப்போகுது.. தங்கத்தின் 'திக் திக்' நிமிடங்கள்.. ஸ்விஸ் வங்கி விடுக்கும் பயங்கர வார்னிங்! -
உலக தங்க மார்க்கெட்டே கதறப்போகுது.. புதின் போட்ட முக்கிய உத்தரவு.. தங்கத்தை அஸ்திரமாக மாற்றிய ரஷ்யா -
Gold Rate: ஈரான் போர் எதிரொலி! தங்கம் விலை கிடுகிடு! மாலை நல்ல செய்தி? -
அமெரிக்கா போரில் பிஸி.. சத்தமின்றி சீனா உருவாக்கும் 'தங்கக் கவசம்'.. ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம் -
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
தங்கம் 'டல்'.. 100 ஆண்டுகளில் நடக்காத மிக மோசமான சம்பவம்.. முதலீட்டை எல்லாம் முறியடித்த சரிவு! -
Gold Rate: சென்னையில் தங்கம் விலை சரிவு! காலையில் கூடிய வேகத்தில் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications