தங்கத்தை விற்கும் நகைக்கடை ஓனர் ஸ்ரீதேவி.. சென்னையை வட்டமிட்ட சுனிதா.. ரூ.10.89 கோடி மாஸ்டர் பிளான்
சென்னை: உலக பொருளாதார மந்தமான நிலை, இந்திய ஏற்றுமதி பொருட்களின் மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி போன்ற காரணிகளால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.. இன்றும்கூட, தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்ந்து, 1 சவரன் ரூ.82,240-க்கும், ஒரு கிராம் ரூ. 10,280-க்கும் விற்பனையாகிறது. நாளுக்கு நாள் தங்கத்தின் மதிப்பு குறையாத நிலையில், தங்க நகைகளின் கொள்ளை சம்பவமும் பெருகி கொண்டிருக்கின்றன.
தங்க நகைகள் கொள்ளை சம்பவம் சென்னையிலும் நேற்று நடந்துள்ளது.. நகைக்கடை உரிமையாளரிடம் நகைகள் மற்றும் பணம் என்று சுமார் ரூ.10.89 கோடிக்கு மோசடி நடந்துள்ளது..

நகைக்கடை ஸ்ரீதேவி
சென்னை வானகரத்தில் Boya Gan Jewelers என்ற பெயரில் நகைகடையை நடத்தி வருகிறார் ஸ்ரீதேவி.. இவருக்கு 50 வயதாகிறது.. இவரது கணவரது பெயர் சதீஷ்குமார் ரெட்டி.
சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் சதீஷ்குமார் கடந்த 11.06.2025 அன்று புகார் ஒன்றை தந்தார்.. அந்த புகாரில், "சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் சுனிதா பிரகாஷ், அவரது கணவர் பிரகாஷ் மற்றும் அனிதா ஸ்ரீதர், சஞ்சய் சோலங்கி ஆகியோர் எனக்கு அறிமுகமானார்கள்.. கடந்த 2022.பிப்ரவரி மாதம் முதல் 06.12.2024ம் தேதி வரை கடன் அடிப்படையில் ரூ.5.13 கோடி மதிப்புள்ள சுமார் 9.5 கிலோ தங்க நகைகளும், ரூ.130 கோடி மதிப்புள்ள வைர நகைகளை பெற்றனர்.
ரூ.10.89 கோடி - போலி செக்
மேலும் முதலீடாக செய்யும் பணத்திற்கு இரட்டிப்பு பணம் தருவதாக பெற்ற ரூ.4.45 கோடி பணத்தையோ, நகைகளையோ திருப்பிக் கொடுக்காமல் சுமார் ரூ.10.89 கோடி ஏமாற்றிவிட்டனர்.. அவர்களிடம் அந்த பணத்தை திரும்ப கேட்டபோது, சிவகுருநாதன் என்பவர் என்னை மிரட்டினார். என்னை பெண் என்றும் பாராமல் பிரகாஷ் மற்றும் சிவகுருநாதன் ஆகியோர் அவதூறான வார்த்தைகளால் திட்டி துன்புறுத்தினார்கள்.

மேலும், போலி வரைவோலையை காண்பித்து என்னை ரூ.10.89 கோடி வரை ஏமாற்றிவிட்டார்கள்.. எனவே மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஸ்ரீதேவி தன்னுடைய புகார் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஸ்ரீதேவியை ஏமாற்றிய கும்பல்
இந்த புகாரின் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணையும் மேற்கொண்டனர்.. அப்போதுதான், மேற்படி நபர்கள், ஸ்ரீதேவியை ஏமாற்றியிருப்பது உறுதியானது..
ஸ்ரீதேவியிடமிருந்து நகைகளை பெற்றுக் கொண்டு, அதற்குரிய பணத்தையும் தராமல் வழக்கறிஞர் சிவகுருநாதன் என்பவரை வைத்து, ஸ்ரீதேவியை மிரட்டியதும் விசாரணையில் உறுதியானது.. அதுமட்டுமல்ல, வக்கீல் சிவகுருநாதன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பல வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருக்கிறதாம். போலீசாரின் இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டார்கள்..

மூளையாக செயல்பட்ட சுனிதா
இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அருண் உத்தரவிடவும், உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, முதல் குற்றவாளியான சுனிதா பிரகாஷ் கைது செய்யப்பட்டார்..
சுனிதாவை தொடர்ந்து அவரது கணவர் பிரகாஷ், வக்கீல் சிவகுருநாதன் உள்ளிட்டோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.. மற்றவர்கள் தலைமறைவாக உள்ளதால் அவர்களையும் தீவிரமாக தேடிவருகின்றனர். கைதான 3 பேரும் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications