நாளை தங்கம் விலை எகிற போவது கன்பார்ம்.. உடனே கடைக்கு ஓடுங்க.. சர்வதேச சந்தையில் புதிய உச்சம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச சந்தையில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 3524 டாலருக்கு விற்கப்படுகிறது. சர்வதேச மார்கெட்டை பொறுத்தே இந்தியச் சந்தையும் இருக்கும் என்பதால் இந்தியாவிலும் நாளை தங்கம் விலை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் செய்யும் செயல்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவது, பெடரல் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சர்வதேச மார்கெட்டில் தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்த வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது.

Gold Surges Past 3 500 in international market as US Rate Cut Bets Grow strong bull run expected

சர்வதேச மார்கெட்டில் புதிய உச்சம்

இதற்கிடையே சர்வதேச மார்கெட்டில் இன்று தங்கம் விலை தாறுமாறாக ஏறி வருகிறது. இன்று செவ்வாய்க்கிழமை சர்வதேச மார்கெட்டில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் $3,500ஐ தாண்டி, புதிய உச்சத்தை அடைந்துவிட்டது. சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை இந்தளவுக்கு உச்சம் தொடுவது இதுவே முதல்முறையாகும்.

அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கும் என முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். இதுவே தங்கம் விலை உச்சம் தொடப் பிரதானக் காரணமாக இருக்கிறது. மேலும், சர்வதேச அளவில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதாரக் குழப்பங்களும் தங்கம் விலை உச்சத்திற்குப் போகக் காரணமாக இருக்கிறது. இந்திய நேரப்படி இன்று 10 மணியளவில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் 48 டாலர் உயர்ந்து 3524 டாலருக்கு விற்கப்படுகிறது.

விலை எவ்வளவு

அமெரிக்காவில் பொதுவாகத் தங்கம் 24 கேரட்டில் தான் வர்த்தகமாகும். அதன்படி பார்த்தால் இப்போது இந்திய மதிப்பில் ஒரு கிராம் தங்கம் 9,973.50 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அட இந்தியாவை விடக் கம்மியா இருக்கே என நீங்கள் நினைக்கலாம்.. இந்திய ரூபாய் மதிப்பு, உள்நாட்டு தேவை மற்றும் சப்ளை பொறுத்தும் இந்தியாவை விடச் சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை இந்தியாவில் கொஞ்சம் அதிகமாக இருக்கும்

அதேபோல கோல்ட் ஃப்யூச்சர்ஸ் இன்று ஒரே நாளில் 69 டாலர் உயர்ந்து 3,585 டாலருக்கு வர்த்தகமாகிறது. அதாவது இந்திய மதிப்பில் ஒரு கிராம் தங்கம் ரூ.10,146க்கு வர்த்தகமாகிறது.

இதுவே புதிய உச்சம்

தங்கம் விலை இந்தளவுக்கு உச்சம் தொட்டது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு ஸ்பாட் தங்கம் $3,508.50க்கு போய் இருந்ததே புதிய உச்சமாக இருந்தது. ஆனால், இப்போது அதையும் தாண்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது.. இந்த ஆண்டு தொடக்கம் முதல் மட்டும் தங்கம் விலை 33% விலை உயர்ந்துள்ளது.

காரணம் என்ன!

இது தொடர்பாக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் ஆய்வாளர் சுக்கி கூப்பர், "செப்டம்பர் காலகட்டத்தில் தங்க சீசன் தான்.. எப்போதும் இந்தக் காலகட்டத்தில் தங்க விற்பனையும் தங்க தேவையும் அதிகரிக்கும். மேலும், செப்டம்பர் மாத அமெரிக்க ஃபெடரல் வட்டி விகிதமும் குறைய உள்ளது. இதனால் தங்கம் விலை வரும் காலத்தில் மேலும் மேலும் உயர்ந்து புதிய உச்சம் தொடும் என்றே நினைக்கிறோம். 2025 மூன்றாம் காலாண்டில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 3500 டாலர் என்ற ரேஞ்சில் இருந்தது. அடுத்த 4ம் காலாண்டில் 3700 டாலராக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

செப்டம்பர் 17ம் தேதி நடைபெறும் ஃபெடரல் கூட்டத்தில் 25 அடிப்படைப் புள்ளி வட்டி விகிதம் குறைக்கப்படலாம்.. வட்டி குறைக்கப்பட 90% வாய்ப்பு இருக்கிறது. அப்படிக் குறைந்தால் தங்கம் விலை இன்னும் உயரும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். சர்வதேச சந்தையில் ஸ்பாட் வெள்ளி ஒரு அவுன்ஸ் 0.5% குறைந்து $40.48ஆக இருந்தது. பிளாட்டினம் 0.7% குறைந்து $1,389.75 ஆகவும், பல்லேடியம் 1.4% சரிந்து $1,121.75 ஆகவும் இருந்தது.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+