"சிவப்பு சிலிண்டர்".. கேஸ் விநியோகத்தில் அதிரடி மாற்றம்.. மத்திய அமைச்சகம் அறிவிப்பு.. என்னனு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலிண்டர் விநியோகத்தில் புதிய அறிவிப்பை மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.. இந்த திட்டம் மிகுந்த மகிழ்ச்சியை பொதுமக்களுக்கு தந்து வருகிறது.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் நாடு முழுவதும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. வீடுகளிலும், வணிக ரீதியாக நிறுவனங்களிலும் கேஸ் சிலிண்டர்கள் தவிர்க்க முடியாத தேவையாக உள்ளன..

Good announcement and Incentives on cards to increase LPG cover in remote areas

ஆனால், ஒவ்வொரு முறை சிலிண்டர் விலை உயரும்போதும் கடும் நெருக்கடி ஏற்படுகிறது.. இந்நிலையில்தான், கடந்த வருடம் ஜூலையில், சிலிண்டர் விநியோகத்தை நிறுத்த மத்திய அரசுத்திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியானது..

நிதிச்சுமை: மக்களின் நிதிச்சுமையை கருத்தில்கொண்டே, இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.. அதாவது, சிலிண்டருக்குப் பதிலாக பைப் (Pipe gas)மூலம் எரிவாயு விநியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும், இப்போது பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஏற்றவாறு, கட்டணம் செலுத்துவதை போல, பைப் எரிவாயுவிற்கும் நமக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.

நாடு முழுவதும் பைப் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதற்கான மெகா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என்று கூறி நாடாளுமன்றத்திலேயே பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டிருந்தார்.. இதற்கான விரிவாக்க பணிகளும் ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் அதற்கான துரித நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி வருவதாக தெரிகிறது..

கேஸ் சிலிண்டர்: இப்படிப்பட்ட சூழலில், பொதுமக்களின் நன்மைக்காக இன்னொரு அதிரடியையும் மத்திய அரசு செய்துள்ளது.. இதற்கு காரணம், சிலிண்டருக்கு மத்திய அரசு மானியங்களை அளித்து வந்தாலும்கூட, குறிப்பிட்ட சில பகுதிகளில் சிலிண்டர் பயன்பாடு என்பது அரிய விஷயமாக உள்ளது.. அவர்களுக்காகவே, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த போகிறதாம்..

கடினமான பகுதிகள்: அதன்படி, கடினமான மற்றும் தொலைதூர பகுதிகளில் அதாவது, பழங்குடியினர் வசிக்கும் அடர்ந்த பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகள், காடுகள், குறைந்த மக்கள் தொகை கொண்ட இடங்கள், சிக்கலான பகுதிகள், தீவுகள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் (LWE) பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்பிஜ விநியோகம் செய்வதற்காக அரசு விநியோகஸ்தர்களுக்கு ஊக்கத்தொகைகளை அதிகரிக்க போகிறதாம்..

பாலை வார்க்கும் திட்டம்: அதுமட்டுமல்ல, விண்ணப்ப செயல்முறையை எளிதாகவும் திட்டமிட்டுள்ளதுடன், இதன்மூலம் நாட்டின் அனைத்து பகுதி மக்களுக்கும், சிலிண்டர் பயன்பாடு என்பது எளிய முறையில் அணுக கூடியதாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. மத்திய அரசின் இந்த புதிய திட்டமானது, நாடு முழுவதிலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாலைவார்த்துள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+