வில்லங்க சான்றிதழ்.. பத்திரப்பதிவு முறையில் வருகிறது மாற்றம்.. ஆன்லைன் விண்ணப்பங்களில் புதிய நடைமுறை?
சென்னை :'ஆன்லைன் முறையில் வில்லங்க சான்று கோரும் விண்ணப்பங்களை, கையாளுவதற்கான கால வரம்பு மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. என்ன காரணம்?
பொதுவாக நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புவர்கள் அந்த சொத்தின் முந்தைய ஓனர்கள் குறித்தும், அதில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும், வில்லங்க சான்றினை பெறுவார்கள்.

குறிப்பிட்ட அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்று இது.. இதில் அந்த குறிப்பிட்டு சொத்து யார் வசம் இருந்து கைமாறி வந்தது என்ற அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
பதிவுத்துறை: அந்த சொத்து பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் என சகல விவரங்களும் இதில் உள்ளடங்கி இருக்கும். இதன் மூலம் ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய தினம், அசையா சொத்தின் மீது வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களில் கடன் பெறவும் வில்லங்க சான்று தேவையாக இருக்கிறது.. முன்பெல்லாம் இந்த வில்லங்க சான்றினை பெறுவதற்காக, பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டி இருந்தது. ஆனால், இப்போது, ஆன்லைன் மூலமாகவே, வில்லங்க சான்றினை பொதுமக்கள் பெற முடியும்.. தமிழ்நாடு பதிவுத்துறை சார்பில் வழங்கப்படும் இந்த சான்றினை, இணைய வழியில் எளிய முறையில் விண்ணப்பித்து, பெற்றுக்கொள்ளலாம்..
வில்லங்க சான்றிதழ்: இதற்காக எந்தவித லஞ்சமும் புரோக்கர்கள் உட்பட யாருக்குமே தர வேண்டிய அவசியமில்லை. இப்படி விண்ணப்பிக்கும்போது, இரண்டு அல்லது மூன்று நாட்களில், வில்லங்க சான்றிதழ் வழங்க வேண்டும்.. ஆனால், பெரும்பாலான அலுவலகங்களில், இதுபோன்று ஆன்லைன் முறையில் பதிவாகும் விண்ணப்பங்களுக்கு, உரிய காலத்தில் வில்லங்க சான்றிதழ்கள் கிடைப்பதில்லை என்று புகார்கள் எழுகின்றன.. அதாவது, ஆன்லைனில் 24 மணி நேரமும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்றாலும், சார் பதிவாளர் அலுவலகங்கள், காலை முதல் மாலை வரையே செயல்படுகின்றன.
அதிலும், மாலை 4 மணி வரை பதிவாகும் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.. அதற்கு பிறகு, அலுவலக நேரம் முடிந்து விடுவதால், 4 மணிக்கு மேல் பதிவாகும் விண்ணப்பங்கள் மீது மறுநாள் காலை தான் நடவடிக்கை எடுக்க முடிகிறது.. இந்த விஷயத்தைதான், பதிவுத் துறை கையில் எடுத்துள்ளது.. பொதுமக்கள் விண்ணப்பிக்கும்போது, அதன்பேரில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சார் பதிவாளர்களுக்கு முக்கிய உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
அதாவது, ஆன்லைனில் வில்லங்க சான்று விண்ணப்ப பதிவில், மாலை, 4 மணிக்கு மேல் பதிவாகும் விண்ணப்பங்களை, அடுத்த நாள் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று விரைவில் உத்தரவிடப்போவதாக தெரிகிறது.. இது பொதுமக்களுக்கு மிகுந்த தெம்பை தந்து வருகிறது.
பெருத்த நம்பிக்கை: இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது, பொதுமக்களும், இதிலுள்ள எதார்த்த சூழலை அறிந்து அதற்கேற்றபடி, தங்கள் விண்ணப்பங்களை பதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்.. எனவே, ஆன்லைன் நடைமுறையில் சில மாற்றங்கள் செய்வது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். விரைவில் இதுகுறித்த முடிவை வெளியிடுவார்கள் என்று நம்புகிறோம்" என்றனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications