சமையல் கியாஸ்: இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கேஸ் சிலிண்டர் தீர்ந்துடுச்சா.. இனி நிம்மதி.. மாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையல் கேஸ் தட்டுப்பாடுகள் அதிகரித்தபடியே வருவதால், இதற்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.. இது சென்னை மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, வீடுகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன

 Good news and cylinders are coming in 100 trucks from neighboring states every day

இந்நிலையில், சமையல் கேஸ் புக்கிங், சென்னையில் தலைதூக்கி உள்ளது.. வழக்கமாக கேஸ் புக் செய்தால், ஓரிரு நாட்களிலேயே கேஸ் வந்துவிடும். ஆனால் இப்போது, புக் செய்து 4 நாட்களானாலும், சிலிண்டர் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

சிலிண்டர் இல்லாததால் ஒவ்வொரு வேளையும் வெளியில்தான் உணவு சாப்பிட வேண்டியதாக இருக்கிறது என்றும், இந்த விஷயத்தில் கேஸ் நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் சென்னை மக்கள் கோரிக்க விடுக்க துவங்கி உள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாடுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை..

தட்டுப்பாடு அதிகம்: கடந்த ஜனவரி மாதம் ஈரோட்டில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் கேஸ் நிரப்பும் பணியின்போது ஊழியர் ஒருவர் இறந்துவிட்டார்.. அதேபோல திருச்சி இனாம் குளத்தூரில் கேஸ் நிரப்பும் ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக 2 பேர் காயமடைந்தனர்... பொதுவாக ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை புதிய சிலிண்டர்கள் மாற்றப்படும். இப்படி மாற்றப்படாத சிலிண்டர்களால்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

பழைய சிலிண்டர்: எனவே பழைய சிலிண்டர்களையும், துருபிடித்த சிலிண்டர்களையும் மாற்றவும், விபத்துக்களை தவிர்க்கவும், புதிய சிலிண்டர்களை இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அது வந்தவுடன்தான், அதில் கேஸ் நிரப்பி விநியோகம் செய்கிறது. இந்த புதிய சிலிண்டர்கள் வருவதற்கு சற்று கால தாமதம் ஏற்பட்டது.. ஆனால் போதுமான அளவுக்கு புதிய சிலிண்டர்கள் வராததால் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது..

இதன் காரணமாக சென்னையில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.,., 8 நாட்கள் ஆனாலும் புக்கிங் செய்யப்பட்ட சமையல் கேஸ் வரவில்லை என்கிறார்கள். இப்படியான பிரச்சனைகளுக்குதான், ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது. சென்னையில் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க பக்கத்து மாநிலங்களில் இருந்து வரவழைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கியாஸ் சிலிண்டர் கொண்டு வரப்படுகிறது. தேவைக்கு ஏற்ப தினமும் 100 லாரிகளில் சிலிண்டர் சென்னைக்கு வருகிறது. ஒவ்வொரு லாரியிலும் 366 சிலிண்டர்கள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. மேலும் செங்கல்பட்டு, சேலம், ஈரோடு, மயிலாடுதுறை, மன்னார்குடி ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளில் இருந்தும் தினமும் 124 லாரிகளில் சிலிண்டர்கள் வருகிறது.

சிலிண்டர் தட்டுப்பாடு: இதன் காரணமாக இப்போது சிலிண்டர் தட்டுப்பாடு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இப்போது சென்னையில் முன்பதிவு செய்த 5 நாட்களில் சிலிண்டர் வழங்கப்படுகிறது. சென்னை நகருக்கு தினமும் 45 ஆயிரம் சிலிண்டர்கள் தேவைப்படுவதால், இதை சரி செய்ய 1.25 லட்சம் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட போகிறார்களாம்.. எனவே அடுத்த சில நாட்களில் இந்த நிலைமை முழுமையாக சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+