சென்னையை விடுங்க.. தென்மாவட்ட மக்களுக்கு நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்.. என்னன்னு பாருங்க
தென் மாவட்ட மக்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மீண்டும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகத்திற்கு இந்த வாரம் மழை இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், கடந்த மார்ச் 25-ம்தேதி முதல் 26, 27, 28-ம் தேதி வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில்ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தமிழகம்
அந்தவகையில், இன்று 26ம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூடுதலாக தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதன்படி சில மாவட்டங்களில் நல்ல மழையும், சில மாவட்டங்களில் லேசான மழையும், பெய்துள்ளன.. இந்நிலையில், மேலும் ஒரு தகவலை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

அறிவிப்பு
அதன்படி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கையில், தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

சென்னை
தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்ப உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது... சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை மையம் கணித்து தெரிவித்துள்ளது.

காரைக்கால்
முன்னதாக, குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications