"சிக்ஸர்".. 1000 ரூபாய் அறிவித்த திமுக அரசு.. பறந்து வந்த குட்நியூஸ்.. அமைச்சர் பொன்முடி அதிரடி
1000 ரூபாய் மாணவிகளுக்கு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்
சென்னை: உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு இந்த ஆண்டு முதல், மாத மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.. இப்போது 2-ம் ஆண்டில் திமுக பயணிக்கிறது.
முன்னதாக, தேர்தலின்போது திமுக ஏராளமான வாக்குறுதிகள் அளித்தது.. மொத்தம் 500 வாக்குறுதிகளில், 200 வாக்குறுதிகளுக்கு மேல் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஸ்டாலின் சொல்லி வருகிறார்..

அதிமுக, பாஜக
ஆனாலும், குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற தேர்தலின்போது அளித்த முக்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து கொண்டே இருக்கின்றன. இதில்,, 1000 ரூபாய் அறிவிப்பு எப்போது வரும் என்று பொதுமக்களே ஆர்வமுடன்தான் காத்திருக்கிறார்கள்.

1000 ரூபாய்
ஆனால், தமிழக பட்ஜெட்டின்போது, "மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதலாண்டில் செயல்படுத்த முடியாத நிலை இருக்கிறது. மகளிருக்கான உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களை கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது" என்று பிடிஆர் சொன்னதுமே தமிழக மக்கள் ஏமாற்றமடைந்தனர்... எனினும், எதிர்பாராத விதமாக, 1000 ரூபாய் மாணவிகளுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது..

மூவலூர் ராமாமிர்தம்
மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்திட்டத்தின்கீழ், 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அதிரடியாக அறிவித்துள்ளார்.

உதவித்தொகை
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி மேலும் சொன்னதாவது: "ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் இதன்மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள்... உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் திட்டமாக இது கருதப்படுகிறது... பெண்களுக்கான உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும்..

2 லட்டுகள்
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் கலந்தாய்வா? என்பது குறித்து கல்வியாளர்களுடன் வரும் 17ம் தேதி ஆலோசனை மேற்கொள்ள போகிறேன்.. நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் பொறியியல் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும்" என்றார் பொன்முடி.. அதாவது, மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி மட்டுமல்லாமல், மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரையும் மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது, இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications