அதிகாலையிலேயே வந்த குட் நியூஸ்.. சட்டென சிலிண்டர் விலை குறைஞ்சிடுச்சு பாருங்க.. புதிய விலை என்ன?
சென்னை: வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது. அதிகாலையில் திடீரென வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எல்பிஜி விலையானது முக்கியமாக அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுகிறது, மேலும் இது உலகளாவிய கச்சா எரிபொருள் விலையின் அடிப்படையில் மாத அடிப்படையில் மாற்றத்திற்கு உட்பட்டது. கச்சா எண்ணெயின் விலை உயர்வால் தமிழகத்தில் எல்பிஜி விலை உயர்வு மற்றும் அதற்கு நேர்மாறாக உள்ளது. எல்பிஜி பாதுகாப்பான மற்றும் நிறமற்ற வாயுவாகும்.

எனவே அதன் பயன்பாடு உள்நாட்டு மற்றும் தொழில்துறை துறையில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. சமூகத்தின் குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு மானிய விலையில் இந்திய அரசாங்கம் தற்போது வீட்டு எல்பிஜி எரிவாயு சிலிண்டரை (14.2 கிலோ) \வழங்குகிறது. மானியத் தொகை நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். தற்போது, இந்தியாவில் சமையல் எரிவாயு பெரும்பாலான மக்கள் எளிதில் அணுகக்கூடியதாக உள்ளது.
சிலிண்டர் விலை குறைப்பு: சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த 4 மாதங்களுக்கு முன் ₹23.50 உயர்ந்து ₹1,960.50க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சிலிண்டர் விலை ரூ.1,937இல் இருந்து ரூ.1,960.50 காசுகளாக உயர்ந்தது. அதன்பின் தொடர்ச்சியாக 4 மாதங்களாக சிலிண்டர் விலை குறைந்தது.
அந்த வகையில் இந்த மாதமும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது. அதிகாலையில் திடீரென வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து ரூ.1809ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.151 குறைந்துள்ளது. வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை மாற்றமின்றி ₹818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் கடந்த் 4 மாதங்களுக்கு முன் ரூ. 918க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 4 மாதங்களில் 100 ரூபாய் அதில் குறைந்துள்ளது.
கோரிக்கை என்ன?: முன்னதாக பெட்ரோல் விலை: கேஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து விரைவில் பெட்ரோல், டீசல் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது..
இந்தியாவில் கடந்த வருடம் பாதி வரை பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது.
நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் தானாக போக்குவரத்து செலவும் உயரும். இதுவே பணவீக்கத்திற்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது. மே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 15.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 வருடங்களில் இதுதான் மிக அதிகம் ஆகும்.
மக்கள் இடையே இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டது.
அதன்பின் ஒன்றரை வருடமாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 96.35 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 89.52 க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை லிட்டர் 101.94 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 87.89 ரூபாயை தாண்டி உள்ளது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள்: இந்த நிலையில்தான் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல் போன்ற நிறுவனங்களில் பெட்ரோல் விலையை குறைக்கும் படி கோரிக்கை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பெரிதாக இல்லை. கச்சா எண்ணெய் விலை 140 டாலரில் இருந்து 72 டாலராக குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை. அதோடு இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் வர்த்தகத்தில் மொத்தமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிகர லாபம் பார்த்துள்ளது
இந்த நிலையில்தான் மக்கள் நலன் கருதி இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல் போன்ற நிறுவனங்களில் பெட்ரோல் விலையை குறைக்கும் படி கோரிக்கை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவிற்கு பின் இந்த நிறுவனங்கள் பொருளாதார சரிவில் இருந்து மீண்ட நிலையில்தான் தற்போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும்படி மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications