சென்னையில் அமையப் போகும் சுற்றுவட்டப் பாதை: மெட்ரோ ரயில் நிறுவனம் சூப்பர் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை நகரை இரண்டரை மணி நேரத்தில் பயணிகள் ஒற்றை ரயில் பயணத்தில் சுற்றி வரும் விதமாக, சுற்று வட்டப்பாதை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. தற்போது 2ம் கட்ட மெட்ரோ ரயில் கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் இந்த பணிகள் முடிந்த பின்னர் அமைக்கப்படும் என எதிர்ப்ர்க்கப்படுகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, 45 கி.மீ. தொலைவில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து முடிந்தன. இதன்பின்னர் விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரை நீல வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை பச்சை வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதனிடையே மாதவரம்-சிப்காட் (45.8 கி.மீ.), மாதவரம்-சோழிங்கநல்லூா் (47.0), கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி (26.1 கி.மீ.) ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என்று இரண்டாம் கட்ட திட்டம் 118.9 கி.மீ. தொலைவிற்கு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

எவ்வளவு கோடி

எவ்வளவு கோடி

இந்தத் திட்டத்துக்கு ரூ.61,843 கோடியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. 2026-க்குள் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தனை கிமீ தூரம்

எத்தனை கிமீ தூரம்

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் முடிந்து ரயில் சேவை தொடங்கும்போது, சென்னை நகரை இரண்டரை மணி நேரத்தில் ஒற்றை ரயில் பயணத்தில் பயணிகள் சுற்றிவரும் விதமாக, சுற்றுவட்டப் பாதை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. அதாவது மாதவரத்தில் ஏறி சென்னையின் கிழக்கே அடையாறு, மேற்கே கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூா் வரை 81 கி.மீ. தொலைவுவரை சுற்றுவட்டப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவசம் வைத்துள்ளது மெட்ரோ நிறுவனம்

எப்படி இருக்கும்

எப்படி இருக்கும்

இந்த சுற்றுவட்டப் பாதையில் மாதவரம்-சிப்காட் (45.8 கி.மீ தொலைவு), மாதவரம்-சோழிங்கநல்லூா் (47.0 கி.மீ. தொலைவு) ஆகியவற்றை இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சுற்றுவட்டப் பாதை, சென்னை சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து விமானநிலையம் மெட்ரோவை இணைக்கும் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் செயல்படும் நேரடி பாதை போல் இருக்கும்.

எத்தனை ரயில்கள்

எத்தனை ரயில்கள்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், மாதவரத்தில் இருந்து கோயம்பேடு, சோழிங்கநல்லூா், அடையாறு வழியாக மாதவரத்தை அடையும் வகையில் சுற்றுவட்ட பாதை உருவாக்கப்படும்.. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஏழு ரயில்கள் இயக்கப்படும். ஒவ்வொரு 8.5 நிமிடத்துக்கும் ஒரு ரயில் இயக்கப்படும்.

பயண நேரம்

பயண நேரம்

பெரும்பாக்கத்தில் இருந்து (மாதவரம்-சோழிங்கநல்லூா் வழித்தடம்-5 இல்) பெரம்பூருக்கு (மாதவரம்-சிப்காட் வழித்தடம்-3) அல்லது தரமணியில் இருந்து (மாதவரம்-சிப்காட் வழித்தடம்-3) திருமங்கலத்துக்கு (மாதவரம்-சோழிங்கநல்லூா் வழித்தடம்-5) பயணிக்க காத்திருக்கும் பயணிகள் இந்த ரயிலில் ஏறலாம். இந்த வழித்தடத்தில் உள்ள ரயில்கள் போரூா் சந்திப்பில் இருந்து ஒற்றை ரயில் பயணத்தில் பெருங்குடி அல்லது காரப்பாக்கம் உள்பட பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நிலையங்களுக்கு செல்ல முடியும். இதன்மூலம், பயணிகளுக்கு பயண நேரம் வெகுவாக குறையும். பயணிகள் வருவாய் அதிகரிக்கும்" என்றார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+