சென்னை மதுரவாயலில் இன்னும் 7 நாளில் இந்த பக்கம் போக முடியாது.. டிராபிக் மாறுகிறது! ஹேப்பி சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், புறநகர் பகுதிகளின் இணைப்பை மேம்படுத்தவும் சென்னை பெருநகர மாநகராட்சி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.. அதில் ஒன்றுதான், நொளம்பூர் மற்றும் மதுரவாயல் பகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக, கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய நான்கு வழிச்சாலை பாலம்.. இதை பற்றின புது தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

சென்னையின் மேற்கு பகுதி மக்களுக்கு நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த மாற்றம் இப்போது நிஜமாகப் போகிறது.. நொளம்பூர், முகப்பேர் மற்றும் சுற்றுப்பகுதி மக்களின் அன்றாடப் பயணத்தை மாற்றக்கூடிய புதிய பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது.. இன்னும் ஒரு வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது..

Chennai Maduravoyal Nolambur Bridge New cooum Bridge


சென்னைக்கு குட் நியூஸ்

சுமார் 150 மீட்டர் நீளத்தில், 4.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இந்தப் பாலம், அப்பகுதி மக்களின் அன்றாடப் பயணத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது..

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்பகுதி மக்கள் 1996-ல் கட்டப்பட்ட ஒரு சிறிய தரைப்பாலத்தையே பயன்படுத்தி வந்தனர்.. அது மிகவும் குறுகலாகவும், பலவீனமாகவும் இருந்ததால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் நிலவியது.. குறிப்பாக, பருவமழை காலங்களில் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் அந்தத் தரைப்பாலம் நீரில் மூழ்கிவிடும்..

அந்த நேரங்களில் வாகன ஓட்டிகள் முகப்பேர் வழியாகச் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.. இதனால் நேரமும் எரிபொருளும் வீணாகி, மக்கள் தினமும் அவதிப்பட்ட சூழல் நிலவியது..

மதுரவாயல் பாலம்

இந்தப் புதிய பாலம் மதுரவாயல் மற்றும் முகப்பேர் பகுதிகளை இணைக்கும் யூனியன் சாலையை, நேரடியாகப் பூந்தமல்லி நெடுஞ்சாலையுடன் இணைக்கிறது..

தற்சமயம் பாலத்தில் தெருவிளக்குகள் பொருத்துதல் மற்றும் இறுதி கட்டச் சாலைப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.. தேர்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே இந்தப் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.. ஒருவேளை விழா நடத்த நேரம் இல்லாவிட்டாலும், மக்களின் நலன் கருதி நேரடியாகப் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரிய விஷயம்..

இந்தத் திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.. முதலாவதாக, வாகன ஓட்டிகளின் பயண நேரம் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை குறையும்..

வணிக நிறுவனங்கள் - கனரக வாகனங்கள்

எரிபொருள் சிக்கனம் மற்றும் மன அழுத்தம் இல்லாத பயணம் இதனால் சாத்தியமாகும்.. நொளம்பூர் பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.. பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு எளிதான இணைப்பு கிடைப்பதால், அவசர காலங்களில் மருத்துவமனைகளுக்கோ அல்லது அலுவலகங்களுக்கோ செல்வது இனி மிக எளிதாக இருக்கும்..

மேலும், இந்த பாலம் கனரக வாகனங்களைத் தாங்கும் வலிமையுடன் கட்டப்பட்டுள்ளதால், அப்பகுதியின் சரக்கு போக்குவரத்து மற்றும் வர்த்தகம் மேம்படும்.. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதன் மூலம் விபத்துகளும் தவிர்க்கப்படும்.. சின்ன நொளம்பூர் மற்றும் பாடிக்குப்பம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய உள்கட்டமைப்பு மேம்பாடுகள், சென்னையின் மேற்குப் பகுதியை ஒரு நவீன நகர்ப்புறமாக மாற்றிக்கொண்டிருக்கின்றன..

நொளம்பூர் - மதுரவாயல் பாலம்

அதே நேரத்தில், இந்தப் பாலத்தை "நொளம்பூர் - மதுரவாயல் பாலம்" என்று பலர் சொன்னாலும், உண்மையில் இது நொளம்பூர், முகப்பேர் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை இணைப்பை உருவாக்கும் பாலமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.. எனவே சரியான புரிதலுடன் இதை நொளம்பூர் - முகப்பேர் இணைப்பு பாலம் என்று குறிப்பிடுவது தான் தெளிவாக இருக்கும்..

ஒட்டுமொத்தத்தில், இந்தப் புதிய பாலம் வெறும் சிமெண்ட் மற்றும் இரும்பினால் ஆன கட்டுமானம் மட்டுமல்ல.. அது இப்பகுதி மக்களின் முப்பது ஆண்டுகாலக் காத்திருப்புக்கும், நாளைய சுலபமான பயணத்திற்குமான ஒரு நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+