தேங்காய் விவசாயிகளுக்கு மத்திய அரசு குட் நியூஸ்! கொப்பரையில் விழுந்த டபுள் சந்தோஷம்.. இனி நல்ல லாபம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது.. அந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு நேரடியாக பயன்படும் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.. அதில், 2026 பருவத்திற்கான கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.. இந்த அறிவிப்புதான் விவசாயிகளுக்கு பெரும் நம்பிக்கையை தந்து வருகிறது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்றைய தினம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.. அதில் முதலாவது முடிவு, கரும்பு விவசாயிகளுக்கானது, இரண்டாவது முடிவு, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கானது..

விவசாயிகளுக்கு சந்தோஷம்
இதில் முதலாவதாக, 2026 பருவத்திற்கான கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசு ஒப்புதல் நேற்றைய தினம் அளித்துள்ளது.. தேங்காய் விவசாயிகள் தங்கள் உழைப்புக்கு நியாயமான பணம் பெற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே இப்படியொரு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரசு சொன்னபடி, எந்த பயிராக இருந்தாலும் அதன் உற்பத்தி செலவை விட குறைந்தது ஒன்றரை மடங்கு அதிகமாக விலை கொடுக்கப்படும் என்ற அடிப்படையிலேயே இந்த கொப்பரை விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொப்பரை கொள்முதல் விலை
2026 பருவத்தில் நல்ல தரம் கொண்ட அரைக்கும் கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ.12027 என்றும், பந்து கொப்பரைக்கு ரூ.12500 என்றும் அரசு விலை அறிவித்துள்ளது. இது முந்தைய பருவத்தை விட அதிகமாகும்.. அதாவது அரைக்கும் கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ.445 அதிகமாகவும், பந்து கொப்பரைக்கு ரூ.400 அதிகமாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு காரணமாக, தேங்காய் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று அரசு நம்புகிறது... அதுமட்டுமல்ல, நம்முடைய நாட்டிலும்சரி, வெளிநாடுகளிலும் சரி, தேங்காய் பொருட்களுக்கு அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய, விவசாயிகள் அதிகமாக கொப்பரை உற்பத்தி செய்ய முன்வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கொப்பரை கொள்முதல் பணிகளை, அரசு சார்பில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு தொடர்ந்து மேற்கொள்ளும்.. இந்த அமைப்புகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொப்பரையை வாங்கி, அரசு அறிவித்த விலையை அவர்களுக்கு கிடைக்க செய்கின்றன.
2வது சூப்பர் முடிவு
நேற்றைய தினம் இதே அமைச்சரவைக் கூட்டத்தில் மற்றொரு சூப்பர் முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.. அது என்ன தெரியுமா?
2027ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ரூ.11718.24 கோடி செலவிடப்படும். அதாவது மக்கள் தொகை எவ்வளவு? அவர்கள் எங்கே வாழ்கிறார்கள், அவர்களது வீடுகள் எப்படி உள்ளன? என்றெல்லாம் இந்த இந்த கணக்கெடுப்பின்போது கேட்கப்படுமாம்..
அந்தவகையில் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடக்கும்.. முதல் கட்டமாக, வீடுகள் பற்றிய கணக்கெடுப்பாகும்.. இது 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும்.
2ம் கட்டமாக, மக்கள் எண்ணிக்கை கணக்கெடுப்பு 2027 பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும். பனி அதிகமாக இருக்கும் லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் பகுதிகளில் மட்டும், இந்த கணக்கெடுப்பு 2026 செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும்.
மத்திய அரசு நம்பிக்கை
இந்த பணியில் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் களத்தில் வேலை செய்ய போகிறார்களாம்.. தகவல்களை சேகரிக்க செல்போன் அப் ஒன்று பயன்படுத்தப்பட உள்ளதாம்.. கண்காணிப்புக்காக மத்திய அரசு போர்ட்டலும் இருக்கும் என தெரிகிறது..
மொத்தமாக இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக சுமார் 18,600 பேர் வேலை செய்ய உள்ளனர். அவர்கள் சுமார் 550 நாட்கள் பணியில் இருப்பார்கள். இதன் காரணமாக, மக்களுக்கு சேர்த்து சுமார் 1.02 கோடி நாட்கள் வேலை கிடைக்கும் என்று அரசு நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications