Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி.. காலதாமதம் இன்றி செய்யுங்க.. பள்ளி கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 3 ஆண்டுகளுக்கு மேல் பணியில் உள்ள நோ்முக உதவியாளா், கண்காணிப்பாளா், பதவி உயா்த்தப்பட்ட கண்காணிப்பாளா், உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்தர்கள் பட்டியல் அண்மையில் பெறப்பட்டது. இந்நிலையில் நோ்முக உதவியாளர்களுக்கு விருப்ப விண்ணப்பத்தின் அடிப்படையில் மாறுதல் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் அனைத்துவகை இயக்கங்கள், அலுவலகங்களின் நிா்வாகம் திறம்படச் செயல்படும் பொருட்டு, அதில் பணிபுரியும் பணியாளா்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணியிடத்தில் இல்லாமல், அவா்களை மாறுதல் செய்யவும், விருப்ப மாறுதல் ஆண்டுதோறும் நடத்தவும் தமிழக அரசால் நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருந்தது.

government employees teachers

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள், ஆசிரியா் தோ்வு வாரியம், இயக்குநரகங்கள், பள்ளிகளில் கடந்த ஜூன்-30 ஆம் தேதி நிலவரப்படி, 3 ஆண்டுகளுக்கு மேல் நோ்முக உதவியாளா், கண்காணிப்பாளா், பதவி உயா்த்தப்பட்ட கண்காணிப்பாளா், உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் பணியிடங்களில் பணிபுரிபவா்களின் பட்டியல் அனைத்து முதன்மை கல்வி அலுவலா்களாலும் பெறப்பட்டது. அப்படி பெறப்பட்ட பட்டியலில் உள்ள நேர்முக உதவியாளர்களுக்கு கட்டாய பணி இடமாறுதல் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் நலன் கருதி ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்த கலந்தாய்வுக்கு முன்னர் 3 ஆண்டுகளுக்கு மேல் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக (இடைநிலை) பணிபுரிபவர்களுக்கு கட்டாய பணி இடமாறுதல் வழங்கவும், 3 ஆண்டுகளுக்கு கீழ் பணியாற்றுபவர்களுக்கு விருப்ப விண்ணப்பத்தின் அடிப்படையில் மாறுதல் வழங்கவும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, முதன்மை கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக பணிபுரிபவர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்பு ஆணை வழங்க வேண்டும் என்பதால் எந்தவித காலதாமதமும் இன்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 ஆண்டுகளுக்கு மேல் விருப்ப விண்ணப்பத்தின் அடிப்படையில் மாறுதல் பெற்றதால் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு சிறந்த நிர்வாகத்திறனும், ஆளுமைத்தன்மையும் கொண்டு சிறப்புடன் பணியாற்றக்கூடிய அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக நியமனம் செய்வது தொடர்பாக பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+