இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. சமையல் எண்ணெய் விலை இன்னும் குறைகிறது! மகிழ்ச்சி தரும் பாமாயில் ரேட்
சென்னை: சமையல் எண்ணெய் விலை குறையும் என பொது மக்களுக்கு சந்தோஷமான செய்தி ஒன்று வந்துள்ளது. இல்லத்தரசிகளுக்கு இந்த செய்தி குஷியை தந்து கொண்டிருக்கிறது.. உலக சந்தை மாற்றங்களை பயன்படுத்தி, இந்தியா பாமாயிலை அதிக அளவில் வாங்குவதால், இதன் தாக்கம் விலையிலும் எதிரொலிக்க துவங்கியிருக்கிறதாம்.. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் வாங்கும் நாடாக நம்முடைய இந்தியா உள்ளது.. நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பெரும்பாலும் எண்ணெய்களை வெளிநாடுகளிலிருந்துதான் வாங்குகிறது.

பாமாயில் தேவை அதிகரிப்பு
குறிப்பாக, பாமாயில்தான் நமக்கு அதிகம் தேவைப்படுகிறது.. எனவே, இந்தியா பாமாயிலை அதிகமாக வாங்கும் நாடாக சார்ந்துள்ளது. உலக சந்தையில் பாமாயிலின் விலை சமீபத்தில் குறைந்ததால், கடந்த நவம்பர் மாதத்தில் பாமாயில் இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது...
குறைந்த விலை கிடைப்பதை பயன்படுத்தி, இந்தியா பாமாயிலை அதிக அளவில் ஆர்டர் செய்துள்ளது. இதனால் பாமாயில் இறக்குமதி கடந்த மாதத்தைவிட 5 சதவீதம் அதிகரித்து, 6,32,341 மெட்ரிக் டன்கள் ஆகியிருக்கிறதாம்.
அதேசமயம், மற்ற எண்ணெய்களில் விலை சரிவுக்கு போய்விட்டது.. அதாவது சோயா எண்ணெய் இறக்குமதி 18 சதவீதம் குறைந்து, 3,70,661 டன்கள் ஆக குறைந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 45 சதவீதம் குறைந்து, இந்த 2 வருஷத்தில் இல்லாத அளவுக்கு 1,42,953 டன்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நவம்பர் மாதம் இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த மாதத்தைவிட 13.3 சதவீதம் குறைந்துள்ளது.
சமையல் எண்ணெய் விலை
அதேபோல இந்தியாவுக்கான இறக்குமதி "ரூட்டும்" மாறியுள்ளது.. வழக்கமாக தென் அமெரிக்க நாடுகளை சார்ந்து சோயா எண்ணெய் வாங்கிய இந்தியா, இந்த மாசம் சீனாவிலிருந்து 69,919 டன் சோயாபீன் எண்ணெய் வாங்கியிருக்கிறது.. அதேபோல், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 5,000 டன் கனோலா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
உலக சந்தையில் பாமாயிலின் விலை சோயா எண்ணெய்யை விட டன்னுக்கு 100 அமெரிக்க டாலர்கள் குறைவாகவும், சூரியகாந்தி எண்ணெயை விட டன்னுக்கு 200 டாலர்கள் குறைவாகவும் உள்ளது. இதனால், இந்தியாவில் வாங்குபவர்கள் டிசம்பர், ஜனவரி மாதங்களுக்கு முன்பதிவு செய்யும்போது, பாமாயிலுக்கு முன்னுரிமை தருகிறார்கள்.. சிலர் சோயா எண்ணெய் ஒப்பந்தங்களை ரத்து செய்து, பாமாயிலை ஆர்டர் செய்கிறார்கள்.
பாமாயில் விலை குறைகிறது
பாமாயிலின் விலை குறைவாக இருப்பதற்கான காரணம், உலகின் முக்கிய உற்பத்தியாளர் நாடுகள் இந்தோனேஷியா, மலேசியாவில் விளைச்சல் அதிகரித்திருப்பதுதான்.. அதுமட்டுமல்ல, வானிலையும் சூப்பராக இருப்பதால், விவசாயத்தில் அதிக எண்ணெய் கிடைக்கிறது.. அதனால்தான் விநியோகம் அதிகரிக்கும்போது, விலைகளும் தானாகவே குறைகின்றன..
முக்கிய உற்பத்தியாளர் நாடுகள் தங்கள் இருப்புகளை குறைக்க, ஏற்றுமதியை ஊக்குவிக்கின்றன. இதனால், விரைவில் இந்திய சந்தையிலும் சமையல் எண்ணெய் விலைகள் குறையும் என்று நம்பப்படுகிறது.
இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
இதனால் பொதுமக்கள், குறிப்பாக இல்லத்தரசிகள், அன்றாட தேவையான சமையல் எண்ணெய் விலை குறைவாக வாங்க முடியும்.. உலக சந்தை மாற்றங்களை பயன்படுத்தி, இந்தியா பாமாயிலை அதிக அளவில் வாங்குவதால், எதிர்காலத்தில் சமையல் எண்ணெய் விலை குறைவாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் சமையல் எண்ணெய் விலைகள் குறைய போகிறது, அதுவும் புத்தாண்டுக்கு முன்பே இப்படியான தகவல்கள் வெளியாகி வருவது பொதுமக்களுக்கு நம்பிக்கையை, மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications