அரசு ஊழியர்களுக்கு 60% DA உயர்வு.. நன்றி சொன்ன கையோடு OPS வாக்குறுதியை நினைவூட்டிய சங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்த முதலமைச்சருக்கு அரசு அலுவலக உதவியாளர்கள் சங்கம் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தேர்தல் சமயத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளான பழைய ஓய்வூதியத் திட்டம், தினக்கூலி பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்கத்தின் அகில இந்திய தலைவர் கே.கணேசன், மாநில தலைவர் எஸ்.மதுரம் ஆகியோர் இன்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Tamil Nadu govt employees

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

அந்த அறிக்கையில், கடுமையான விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படியை 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தி வழங்கியதற்கு நன்றி கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்போடு நின்றுவிடாமல், கடந்த ஜனவரி மாதம் முதல் முன் தேதியிட்டு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதலமைச்சருக்கு நன்றி

இந்தச் சலுகையை வழங்கியதற்காகத் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2 லட்சத்து 44 ஆயிரம் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சார்பில் முதலமைச்சருக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகச் சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதே வேளையில், தங்களின் நீண்டகால வாழ்வாதாரக் கோரிக்கைகள் குறித்தும் இந்த அறிக்கையில் அவர்கள் விரிவாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பாக, தங்களது அரசு ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கச் செய்யப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்திருந்ததை சங்கம் நினைவு கூர்ந்துள்ளது.

தினக்கூலி பணியாளர்கள்

மேலும், அரசுத் துறைகளில் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் தினக்கூலி பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும், காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் முறையாக நிரப்பப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏற்கனவே பல கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதேபோன்று அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களுக்கு இதுவரை நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள மற்ற கோரிக்கைகளையும் அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தேர்தல் வாக்குறுதிகளின்படி இந்த முக்கியப் பிரச்சனைகளுக்கும் முதலமைச்சர் செவி சாய்த்து, உரிய
தீர்வுகளை வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்கம் தங்களது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. OPS உள்ளிட்ட கோரிக்கைகள் மீதான அரசின் அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+