தமிழக இல்லதரசிகளுக்கு குட்நியூஸ்.. சமையல் அறைகளுக்கு நிம்மதி தரும் ரஷ்யக் கப்பல்
சென்னை: ரஷ்யா நகோட்கா ஆங் துறைமுகத்திலிருந்து ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெயுடன் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி புறப்பட்ட நோபிள் வாக்கர் கப்பல் மார்ச் 22ம் தேதியா நேற்று சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இதேபோல் சிரியஸ் 1 என்ற மற்றொரு கப்பலும் இன்னும் சில தினங்களில் சென்னை துறைமுகம் வந்தடைய உள்ளது. மேலும், வருகிற 25, 26, 27 மற்றும் 29ஆம் தேதிகளில் கச்சா எண்ணெய் கப்பல்கள் சென்னை துறைமுகம் வந்தடை உள்ளது. இதனால் சிலிண்டர் பிரச்சனை ஓரளவு சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் மீதான போரால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சமையல் எரிவாயுவுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மத்திய அரசு அரபு நாடுளை தவிர்த்து பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. அந்த வகையில் ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெயுடன் ரஷ்யாவில் இருந்து கப்பல் ஒன்று சென்னை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரபவரி 28ம் தேதி போர் தொடங்கியது. கடந்த 24 நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதனால் உலகின் முக்கிய நீர்வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றிவந்த கப்பல்கள் கடலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஈரான் அனுமதி
இந்தியாவிலும் இந்த பிரச்சினை தலைதூக்க தொடங்கி உள்ளது., ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில், இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸை கடந்துவர ஈரான் அனுமதி அளித்திருக்கிறது. மேலும், தங்கள் நாட்டுடன் நட்புறவில் இருக்கும் நாடுகளுக்கு ஹார்முஸ் வழி திறந்தே இருக்கும் எனவும் ஈரான் கூறியுள்ளது.
120 டாலரை நோக்கி உயர்வு
இதனிடையே அமெரிக்காவை அச்சுறுத்தும் விதமாக, வளைகுடா நாடுகளிலுள்ள கச்சா எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் LNG எரிவாயு உற்பத்தி ஆலைகள் மீது ஈரான் தாக்குதல்கள் நடத்தி வருவதால், உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி முடங்கி வருகிறது. இதன் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 120 டாலரை நோக்கி உயர்ந்திருக்கிறது.
ஹார்முஸ் நீரிணை
இதனால 48 மணி நேரத்துக்குள் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக திறக்காவிட்டால் ஈரானில் உள்ள மின் நிலையங்களை அமெரிக்கா தாக்கி அழிக்கும் என டிரம்ப் எச்சரித்தார். அதற்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அவர்களுடைய நட்புறவு நாடுகளிலுள்ள கடல்நீரை நன்னீராக்கும் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானும் பதிலாக எச்சரித்துள்ளது.
வளைகுடா நாடுகளுக்கு சிக்கல்
அப்படி மட்டும் ஈரான் செய்தால், வளைகுடா நாடுகளை மீள முடியாத சிக்கலில் போய் தள்ளும். இதனை சற்றும் எதிர்பார்க்காத அமெரிக்கா அடுத்த கட்டமாக பேச்சுவார்த்தையில் இறங்கி வருகிறது. தற்போதைய நிலையில் சிக்கல் எப்போது தீரும் என்பது தெரியவில்லை. இதனிடையே ஈரான் மீதான போருக்கு முன்னதாக, கச்சா எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்தது அமெரிக்கா.
30 நாட்கள் விலக்கு
ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, வென்சுலாவிடமிருந்து எண்ணெய் வாங்கவேண்டும், இல்லாவிட்டால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்மீது வரி உயர்த்தப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இதனால் ஒரு கட்டத்தில் அமெரிக்கா வலியுறுத்ததை ஏற்றுமதிக்காக இந்தியா ஏற்றுக்கொண்டது. இதனிடையே ஈரான் பிரச்சனை காரணமாக இந்த ஒப்பந்தத்திலிருந்து இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாட்கள் விலக்களித்துள்ளது..
ரஷ்யா கைவிரித்தது
இந்நிலையில், கச்சா எண்ணெய் விலையை குறைக்கவேண்டுமென்று இந்தியா வேண்டுகோள் வைத்தது. ஆனால் ஒப்பந்தத்தை எந்த முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்தால், பழைய சலுகை விலையில் எண்ணெய் தர முடியாது என ரஷ்யா கைவிரித்தது. இதனால் ரஷ்யா நிர்ணயித்த விலைக்கே அங்கிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவருகிறது இந்தியா. அதன் ஒரு பகுதியாக, ரஷ்யா நகோட்கா ஆங் துறைமுகத்திலிருந்து ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெயுடன் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி புறப்பட்ட நோபிள் வாக்கர் கப்பல், நேற்று (மார்ச் 22) சென்னை துறைமுகம் வந்தடைந்தது.
சிரியஸ் 1 கப்பல் வந்தடைய உள்ளது
இதனைத் தொடர்ந்து சிரியஸ் 1 என்ற மற்றொரு கப்பலும் இன்னும் சில தினங்களில் சென்னை துறைமுகம் வந்தடைய இருக்கிறது. மேலும், வருகிற 25, 26, 27 மற்றும் 29ஆம் தேதிகளில் கச்சா எண்ணெய் கப்பல்கள் சென்னை துறைமுகத்தை வந்தடையவிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள். கேஸ் தட்டுப்பாடு கடுமையான நிலவும் சூழலில் இதனை வைத்து ஓரளவு சமாளிக்க முடியும் என தெரிகிறது.
'பஃபர் ஸ்டாக்' ஆக இருக்கும்
கப்பலில் வந்ததுள்ள 'கச்சா எண்ணெய்' சுத்திகரிக்கப்படும் போது உபரிப் பொருளாக சமையல் எரிவாயு கிடைக்கிறது. இந்த ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னையில் உள்ள CPCL போன்ற சுத்திகரிப்பு நிலையங்களுக்கு இந்த எண்ணெய் கொண்டு செல்லப்படும். அங்கிருந்து சிலிண்டர் நிரப்பும் நிலையங்களுக்கு எரிவாயு விநியோகம் சீராகும். மார்ச் 2026 நிலவரப்படி, போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளிலிருந்து வரும் இறக்குமதி குறைந்திருந்த சூழலில், ரஷ்யாவின் இந்த வரவு 'பஃபர் ஸ்டாக்' எனப்படும் கையிருப்பை உயர்த்த உதவும்.
தமிழகத்தின் ஒரு நாள் சிலிண்டர் தேவை எவ்வளவு?
தமிழகத்தின் ஒட்டுமொத்த சமையல் எரிவாயு தேவை இந்தியாவிலேயே மிக அதிகம் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 3.5 லட்சம் முதல் 4 லட்சம் சிலிண்டர்கள் (14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர்கள்) விநியோகம் செய்யப்படுகின்றன.
மாநிலத்தில் சுமார் 2.80 கோடிக்கும் அதிகமான வீட்டு உபயோக கேஸ் இணைப்புகள் உள்ளன.
சென்னைக்கு மட்டும் தேவை எவ்வளவு?
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளடக்கிய சென்னை ரீஜியன்) மாநிலத்தின் மொத்த தேவையில் பெரும் பகுதி உள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 80,000 முதல் 1 லட்சம் சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. தட்டுப்பாடு நிலவும் காலங்களில், முன்பதிவு செய்த 2-3 நாட்களில் கிடைக்க வேண்டிய சிலிண்டர், 10-15 நாட்கள் வரை தாமதமாகிறது. தற்போது வந்துள்ள இந்தக் கப்பல் மூலம் இந்தத் தாமதம் குறைய வாய்ப்புள்ளது.
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
வீட்டு சிலிண்டர் 14.2 கிலோவுக்கு பதில் இனி 10 கிலோ.. மொத்தமாக மாறப்போகுதா.. மத்திய அரசு விளக்கம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி














Click it and Unblock the Notifications