குடையை எடுங்க மக்களே.. குளிர போகும் தமிழகம்.. இங்கெல்லாம் செம மழை இருக்கு.. வானிலை மையம் அதிரடி!

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று முதல் வருகிற 4ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

Recommended Video

    அம்பத்தூர் பால்பண்ணை பகுதிகளில் இடி,மின்னல், காற்றுடன் கூடிய கன மழை

    தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    இன்று முதல் வரும் 4 நாட்களுக்கு கனமழை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது..

     திருவண்ணாமலை

    திருவண்ணாமலை

    இன்றைய தினம், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

     திருப்பூர், தேனி

    திருப்பூர், தேனி

    நாளைய தினம், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்... நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது... 3 மற்றும் 4ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

     முகப்பு விளக்குகள்

    முகப்பு விளக்குகள்

    இதனிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கோவையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் முதல் விட்டு விட்டு லேசாக மழை பெய்தது... இதனால், சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடிந்தது.. பேராவூரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். ஆனால், நேற்று மாலை 5 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

     குளிர்காற்று

    குளிர்காற்று

    அதேபோல, ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையிலும் வெயில் வழக்கம்போல் அடித்தது. இதைத்தொடர்ந்து மதியத்திற்கு மேல், வானில் கருமேகங்கள் தோன்றின. பிறகு, மதியம் 2.15 மணி அளவில் மழை கொட்ட ஆரம்பித்தது.. இந்த மழை பிற்பகல் 3 மணி வரை பெய்தது. இந்த மழை காரணமாக மாலையில் குளிர்ந்த காற்று வீசியது.

     தலைநகரில் மழை

    தலைநகரில் மழை

    தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. சராசரியாக தினமும் 100 டிகிரிக்கும் குறையாத அளவுக்கு அக்னி வெயில் சுட்டெரித்தது... இந்த நிலையில் கடந்த ஜுன் 30-ந் தேதி தென்மேற்கு பருவமழை டெல்லியில் தொடங்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்தது.. அதன்படி நேற்று மழை பெய்தது. தொடக்கத்தில் லேசாக பெய்த மழை, நேரம் செல்லச் செல்ல கனமழையாக மாறியது... சில இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது... இனிமேல் டெல்லியில் வெப்பநிலை கணிசமாக குறையும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+