நிவாரணம் + பொங்கல் பரிசுத்தொகைக்கு இடையே.. மகளிருக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. குஷியில் பெண்கள்
சென்னை: தமிழ்நாட்டில் வழங்கப்படும் வெள்ள நிவாரணம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகைக்கு இடையே பெண்களுக்கு முக்கியமான குட் நியூஸ் ஒன்றும் வந்துள்ளது.
தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிட ரூ.1487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்

அதேபோல் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கும் ரூ. 6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு உத்தரவு: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (17.12.2023) சென்னை, வேளச்சேரி, சக்தி விஜயலட்சுமி நகர், நியாய விலைக் கடை அருகில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியினை பயனாளிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் மழைப்பொழிவின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
மிக்ஜாம் புயல் வெள்ளம்: "மிக்ஜாம்" புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 9.12.2023 அன்று அறிவிப்பினை வெளியிட்டார்.
மற்ற மாவட்டங்கள்: அதேபோல் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கும் ரூ. 6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பயனாளிகள்: இப்படிப்பட்ட நிலையில்தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வரும் ஜனவரி மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி மாதம் இதற்கான புதிய விண்ணப்பங்கள் அளிக்கப்படும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அக்டோபர் இறுதிவரை இவர்கள் கொடுத்தனர்.
இதில் விடுபட்டவர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனை செய்யப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. அதேபோல் ஜனவரி முதல் கூடுதலாக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. அவை ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக மேலும்ம் சிலர் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனராம். தகுதியான நபர்கள் சேர்க்கப்பட உள்ளனர். அவர்களுக்கு அடுத்த மாதம் முதலே பணம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பணம் வழங்கும் தேதியான் 15ம் தேதியில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பொங்கலை மனதில் வைத்து 5ம் தேதி பணம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதோடு இல்லாமல் பொங்கல் பரிசுத்தொகை 1000 ரூபாய் வேறு வழங்கப்பட உள்ளதால் அடுத்தடுத்து மக்களுக்கு பணமழை குவிய உள்ளது.












Click it and Unblock the Notifications