கோயம்பேடு மார்க்கெட்டில் ஸ்பெஷல் சந்தை: ஒரே கூரையின் கீழ்! சென்னை கோயம்பேட்டில் 7 ஏக்கர் குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கலை ஒட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றுமுதல் பொங்கல் சிறப்பு சந்தை நடைபெறுகிறது. அங்காடி நிர்வாகக் குழுவின் மூலம் 7 ஏக்கரில் பொங்கல் சிறப்பு சந்தை நடைபெற உள்ளது. விழுப்புரம், திண்டிவனம், கடலூர், மதுரை, சேத்தியாதோப்பு ஆகிய இடங்களில் இருந்து கரும்புகள் வர உள்ளன. இந்த ஸ்பெஷல் மார்க்கெட்டானது, நெரிசலின்றி பொருட்களை வாங்கி செல்ல, பொதுமக்களின் வசதிக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது..

பொங்கல் பண்டிகை விரைவில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.. இதையொட்டி கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்க, பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

Chennai Koyambedu Pongal Special Market 7 Acres Market 7

இதற்காக மார்க்கெட் கடைக்காரர்கள் மட்டுமல்லாது வெளியிலிருந்து வரும் வியாபாரிகளும் இங்கு பொருட்களை விற்கிறார்கள். அதனால்தான் பொதுமக்களின் வசதிக்காக மார்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமானது, அங்காடி நிர்வாகக் குழுவின் மூலமாக நடப்பாண்டிலும் பொங்கல் சிறப்பு சந்தையை இன்று வியாழக்கிழமை முதல் 17-ந்தேதி
வரை செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு வணிக வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் பொங்கல் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்குத் தேவையான கரும்பு, மஞ்சள் குலை, இஞ்சி, வாழை இலை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக இந்தச் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

தோரணம், மஞ்சள், கரும்பு

விழுப்புரம், திண்டிவனம், கடலூர், மதுரை மற்றும் சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரும்புகளும், ஈரோடு, சேலம் மற்றும் ஆந்திராவில் இருந்து மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்து இந்த சிறப்பு சந்தைக்காகவே வரவழைக்கப்படுகிறது.

தோரணம் உள்ளிட்ட பொருட்கள் குடியாத்தம் பகுதியிலிருந்து வரும் விவசாயிகளால் விற்பனை செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்தச் சிறப்பு சந்தை இன்று தொடங்கி வரும் பொங்கல் பண்டிகை வரை தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து லாரிகள் மூலம் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து பொங்கல் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்.

ஸ்பெஷல் மார்க்கெட் பாதுகாப்பு ஏற்பாடுகள்

கோயம்பேடு சிறப்பு சந்தையை முன்னிட்டு சில அறிவுறுத்தல்கள் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.. அதில், சிறப்பு சந்தையின்போது வியாபாரிகள், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் வியாபாரம் செய்யக்கூடாது. அங்காடி நிர்வாகம் ஒதுக்கி தந்திருக்கும் பகுதியில் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும். அங்காடி நிர்வாக குழுவுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்" என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பொருட்களை எளிதாக வாங்கிச் செல்லவும் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோயம்பேடு சந்தை வளாகத்தில் உள்ள காலியிடங்களில் இந்தச் சிறப்பு கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளுக்காக கூடுதல் காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தை விதிகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மேலும் மார்க்கெட்டுக்கு தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசலின்றி வியாபாரம் மேற்கொள்ளும் வகையில் போலீசார் மூலம் நடவடிக்கை எடுப்பதோடு, அங்காடி நிர்வாகக் குழு ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்களும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என அங்காடி நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+